சென்னை:பொங்கல் பண்டிகையையொட்டி, மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் நாளை (ஜன.12) முதல் கூடுதலாக 340 சிறப்பு இணைப்புப் பேருந்துகள் இயக்கம் என மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அன்பு ஆபிரகாம் இன்று (ஜன.11) தகவல் தெரிவித்துள்ளார்.
அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் பொங்கலையொட்டி, வெளியூர்களுக்கு இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகள் புறப்படும் 5 பேருந்து நிலையங்களுக்கு, மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், கூடுதலாக 340 சிறப்பு இணைப்புப் பேருந்துகளை நாளை முதல் (ஜன.12) முதல் ஜன.14 ஆகிய மூன்று நாட்களுக்கு இயக்கப்படவுள்ளன.
340 சிறப்பு பேருந்துகள் இயக்கம்:இப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை வெகுவாக குறைத்திடவும், பொது மக்களின் வசதிக்காக வெளியூர் செல்லும் பயணிகள் எளிதாக பயணிக்கும் வகையில் கோயம்பேடு பேருந்து நிலையம், மாதவரம் புறநகர் பேருந்து நிலையம், பூவிருந்தவல்லி பேருந்து நிலையம் மற்றும் பூவிருந்தவல்லி Bye Pass, தாம்பரம் புதிய பேருந்து நிலையம் (MEPZ) & தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையம் மற்றும் கே.கே.நகர் பேருந்து நிலையம் ஆகிய 5 பேருந்து நிலையங்களுக்கு 340 சிறப்பு இணைப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
ஊர்த் திரும்ப 175 பேருந்துகள்:பொங்கல் முடிந்து, சென்னை திரும்பும் பொதுமக்களின் வசதிக்காக ஜன.17, 18 ஆகிய தேதிகளில் மாலை மற்றும் இரவு நேரத்தில் 50 பேருந்துகள் மற்றும் ஜன.18, 19 ஆகிய தேதிகளில் அதிகாலை 125 பேருந்துகள் மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இயக்கப்பட உள்ளது என மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 176th Thyagaraja Aradhana fest:'சனாதனம் தமிழ்நாட்டிலிருந்து பரவியது' - ஆளுநர்