தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பணி நேரத்தில் செல்போன் பயன்படுத்த கூடாது...ஆவடி காவல் ஆணையர் எச்சரிக்கை - காவல் ஆணையர் சுற்றறிக்கை

காவல்துறையினர் மற்றும் அமைச்சு பணியாளர்கள் பணி நேரத்தில் செல்போனை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆவடி காவல் ஆணையர் எச்சரித்துள்ளார்.

statement of commissioner of police  Commissioner of Police warned employees  Commissioner warned employees not to use phone  not to use phone during work time  பணி நேரத்தில் செல்போன் பயன்படுத்த கூடாது  காவல் ஆணையர் சுற்றறிக்கை  காவல்துறையினர் மற்றும் அமைச்சு பணியாளர்களை எச்சரித்த காவல் ஆணையர்
பணி நேரத்தில் செல்போன் பயன்படுத்த கூடாது

By

Published : Mar 17, 2022, 8:58 AM IST

Updated : Mar 17, 2022, 9:13 AM IST

சென்னை: அரசு அலுவலகங்களில் பணிபுரியக்கூடிய ஊழியர்கள் பணி நேரங்களில் செல்போனை பயன்படுத்த கூடாது என மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

அந்த வகையில் காவல் ஆணையர் அலுவலகத்தில் பணிபுரியும் அமைச்சு பணியாளர்கள் மற்றும் காவலர்களுக்கு ஆவடி கூடுதல் காவல் ஆணையர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார்.

காவல் ஆணையர் சுற்றறிக்கை

அதில், “மதுரை உயர் நீதிமன்ற உத்தரவுபடி, ஆவடி காவல் ஆணையரகத்தில் பணிபுரியும் அமைச்சு பணியாளர்கள் மற்றும் காவலர்கள் அலுவலக நேரத்தின் போது செல்போனை பயன்படுத்தக்கூடாது. அதனை மீறி செல்போன் பயன்படுத்தும் காவலர்கள் மீது அரசு ஊழியர் நடத்தை விதி 1973இன் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தற்கொலை தீர்வல்ல - மாணவர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு அறிவுரை

Last Updated : Mar 17, 2022, 9:13 AM IST

ABOUT THE AUTHOR

...view details