அடையாறு தூர்வாரப்படும் பணிகளை வருவாய்த்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று பார்வையிட்டார், பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”பொதுப்பணித்துறை மற்றும் மாநகராட்சி இணைந்து, 94.76 கோடி செலவில் அடையாறுவை தூர்வாரும் பணியினைச் செய்து வருகிறன. திருநீர்மலை முதல் முகத்துவாரம் வரை 25 கிமீ நீளம் நடைபெறும் இப்பணிகள், வரும் ஜனவரி மாதத்திற்குள் முடிவடையும்.
ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், ஆற்றினை அகலப்படுத்துதல், ஆற்றின் இரு கரைகளிலும் வெள்ளத் தடுப்புகளை அமைத்தல், பாதிப்புக்குள்ளான பகுதிகளில் 1800 மீட்டர் நீளத்திற்கு கான்க்ரீட் வெள்ளத் தடுப்பு சுவர் அமைத்தல், 8 இடங்களில் வெள்ளத்தடுப்பு உள் வாங்கிகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.