தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 30, 2021, 4:40 PM IST

ETV Bharat / state

’தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி’ - அடங்காமை படக்குழு

இலங்கைத் தமிழர்களின் 'அகதி முகாம்கள்' இனி 'மறுவாழ்வு முகாம்கள்' என அழைக்கப்படும் என்று தெரிவித்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு அடங்காமை படக்குழுவினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

adangamai movie  adangamai movie team  adangamai movie team tanked tamil nadu chief minister  mk stalin  agadhigal mugam  refugee camp  sri lankan refugee camp name changed  sri lankan rehabilitation camp  அடங்காமை படக்குழு  அடங்காமை படம்  முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த அடங்காமை படக்குழு  அடங்காமை படம்  சினிமா அப்டேட்  புதிய படங்கள்
அடங்காமை

சென்னை: வொர்ஸ் பிக்ஸர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் ஆர். கோபால் எழுதி இயக்கி வரும் திரைப்படம் ‘அடங்காமை’. இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

திருக்குறளின் 13ஆவது அதிகாரமான அடக்கமுடைமை அதிகாரத்தில் இடம்பெறும் அடங்காமை இயல்பால் வரும் விளைவுகளைக் கூறும் கதையாக இப்படம் உருவாகியுள்ளது.

'அகதி முகாம்கள்' இனி 'மறுவாழ்வு முகாம்’

இலங்கை மக்கள் சந்திக்கும் சிக்கல்களை மையக் கருத்தாகக் கொண்ட இத்திரைப்படத்தில், இலங்கைத் தமிழரான ஷெரோன் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார்.

இத்திரைப்படத்தில் ‘உள்நாட்டில் நடந்த சண்டையில் சிக்கி, சீரழிஞ்ச பரதேசிகள் நாங்கள்’ என்ற வசனங்களோடு, அகதி முகாம் சம்பந்தப்பட்ட பல காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. இன்றும் கடந்தகால போரின் வடுக்களோடு தமிழ்நாட்டில் இலங்கை மக்கள், அகதிகளாக முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னதாக இலங்கைத் தமிழர்களை அங்கீகரிக்கும் வகையில் “இலங்கைத் தமிழர்களின் 'அகதி முகாம்கள்' இனி 'மறுவாழ்வு முகாம்கள்' என அழைக்கப்படும்" என அறிவித்திருந்தார்.

நன்றி தெரிவித்த படக்குழு

முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த படக்குழு...

இதற்கு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ள 'அடங்காமை' திரைப்படக் குழுவினர், உலகத் தமிழர்களின் சார்பில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: சிம்பு’னா சும்மாவா.... 300 நாள்களில் 3 மில்லியன் ஃபாலோயர்கள்!

ABOUT THE AUTHOR

...view details