சென்னை ஆதம்பாக்கம் பாலாஜி நகர், 6ஆவது தெருவில் அடுக்குமாடி குடியிருப்பில் இரண்டாவது தளத்தில் வசித்துவருபவர் பாரி (45). இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய மகன் பாலமுருகன் (11). இன்று மாலை இருவரும் வீட்டில் இருந்தபோது வீட்டில் இருந்து புகை வந்துள்ளது. அலறல் சத்தமும் கேட்டதால் அக்கம்பக்கத்தினர் கிண்டி தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். ஆனால் தீ விபத்தில் தந்தையும், மகனும் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததனர். இதையடுத்து ஆதம்பாக்கம் போலீசார் இருவரின் உடலையும் மீட்டு உடற்கூராய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவனைக்கு அனுப்பிவைத்தனர்.