தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரெடியா ? எக்ஸ் தளத்தில் லியோ போஸ்டருடன் பதிவிட்ட த்ரிஷா! - etv bharat cinema news

Leo movie update: நடிகர் விஜய் மற்றும் த்ரிஷா நடித்துள்ள லியோ திரைப்படம் வரும் 19ம் தேதி வெளியாக உள்ள நிலையில் படம் குறித்த போஸ்டரை தன் எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் அதிகரித்துள்ளார் நடிகை த்ரிஷா.

ரெடியா ? எக்ஸ் தளத்தில் லியோ போஸ்டருடன் பதிவிட்ட த்ரிஷா!
ரெடியா ? எக்ஸ் தளத்தில் லியோ போஸ்டருடன் பதிவிட்ட த்ரிஷா!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 14, 2023, 6:26 PM IST

சென்னை:14 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் விஜய் த்ரிஷா கூட்டணியில் வெளியாகவுள்ள ‘லியோ’ திரைப்படம் குறித்த போஸ்டரை தன் எக்ஸ் தலத்தில் பதிவிட்டுள்ள த்ரிஷா ரெடியா ? என கேட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் படம் குறித்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவை ஆட்சி செய்து வரும் நடிகை, த்ரிஷா. தற்போது வரை ரசிகர்களின் கனவுக் கன்னியாக வலம் வரும் இவர், தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடியாக நடித்துவிட்டார்.

இந்த நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள ‘லியோ’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். அதுமட்டுமின்றி ஏற்கனவே அஜித் நடித்த ‘என்னை அறிந்தால்’ படத்தில் ஒரு பெண் குழந்தைக்கு அம்மாவாக நடித்திருந்ததையடுத்து, தொடர்ந்து ஒருசில படங்களில் அம்மாவாக நடித்துள்ளார்.

தற்போது ‘லியோ’ படத்திலும் விஜயின் மனைவியாகவும், இரண்டு குழந்தைகளுக்கு தாயாகவும் நடித்துள்ளார். இப்படத்தில் இணைந்ததன் மூலம் விஜய்யுடன் 14 வருடங்களுக்குப் பிறகு 5 வது முறையாக த்ரிஷா ஜோடி போட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி ஆகிய படங்களைத் தொடர்ந்து தற்போது லியோவில் விஜயுடன் இணைந்து நடித்துள்ளார் த்ரிஷா. இப்படம் வருகின்ற 19ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் இவர்களது கூட்டணிக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருப்பதோடு மட்டுமல்லாமல் சூப்பரான ஜோடி என்றும் பேசப்படும்.

இதையும் படிங்க: முதல் 10 நிமிடத்தை மிஸ் பண்ணிடாதீங்க.. லோகேஷ் வைத்த ட்விஸ்ட்!

லோகேஷ் கனகராஜின் எல்லா படங்களிலும் ஒரு முக்கியமான பெண் கதாபாத்திரம் உயிரிழப்பது போல் தயாரிக்கப்பட்டிருக்கும். அது போல ஏதும் நடக்காமல் இப்படத்தில் த்ரிஷாவை எதுவும் செய்யாமல் இருக்க வேண்டும் என்று ரசிகர்கள் வேண்டிக்கொண்டு இருக்கின்றனர்.

படத்தின் பாடல்கள் மற்றும் போஸ்டரில், இருவரது கெமிஸ்ட்ரி ரசிக்க வைப்பதாகவும், இருவரும் பார்க்க மிகவும் அழகாக உள்ளதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் த்ரிஷா தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் லியோ படத்தின் போஸ்டரை பதிவிட்டு ரெடியா என்று கேட்டுள்ளார். மேலும் டெவில் எமோஜியையும் பதிவிட்டுள்ளார். இதன்மூலம் இப்படம் மிகப் பெரிய ஆக்ஷன் என்டர்டெயின்மென்ட்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தில் ஏகப்பட்ட நடிகர்கள் பட்டாளம் இருப்பதால் எப்படியும் ஆக்ஷனுக்கு பஞ்சம் இருக்காது என்பது ரசிகர்களின் நம்பிக்கையாக உள்ளது. த்ரிஷா நடிப்பில் சமீபத்தில் ‘தி ரோடு’ என்ற படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

த்ரிஷா தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கும் ‘விடாமுயற்சி’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த ஜோடியும் ரசிகர்களுக்கு பிடித்தமான ஜோடி என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

இதையும் படிங்க: லியோ பட வெளியீடு; அரசின் கட்டுப்பாடுகளை கண்காணிக்க சிறப்பு குழுக்கள் அமைப்பு!

ABOUT THE AUTHOR

...view details