தமிழ்நாடு

tamil nadu

மீண்டும் களமிறங்கும் பானுப்பிரியாவின் தங்கை

தமிழ் சினிமாவில் எங்க ஊரு பாட்டுக்காரன் படம் மூலம் அறிமுகமான நடிகை சாந்திப்பிரியா மீண்டும் நடிக்கவிருக்கிறார்.

By

Published : Sep 23, 2021, 6:24 PM IST

Published : Sep 23, 2021, 6:24 PM IST

Updated : Sep 23, 2021, 7:00 PM IST

பானுப்பிரியாவின் தங்கை
பானுப்பிரியாவின் தங்கை

சென்னை: தமிழ் சினிமாவில் எங்க ஊரு பாட்டுக்காரன் படம் மூலம் அறிமுகமான நடிகை சாந்திப்பிரியா, அவரது முதல் படமே பம்பர் ஹிட்டானதுடன், தமிழ்நாட்டு மக்களின் மனம் கவர்ந்த நடிகையாகவும் மாறினார்.

பிரபல நடிகை பானுப்பிரியாவின் தங்கையான இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு, இப்போது OTT மூலம் மீண்டும் நடிக்க களமிறங்கியுள்ளார்.

சாந்திப்பிரியா

நேற்று (செப் 22) பிறந்தநாள் கொண்டாடிய, இவருக்கு சமூக வலைதள பக்கத்தில் பலர் வாழ்த்து தெரிவித்தனர். திரைத்துறையிலிருந்து விலகிய பிறகு தூர்தர்ஷன் சேனலில் ஆன்மிக தொடர்களில் நடித்து வந்தார்.

2012ஆம் ஆண்டிற்கு பிறகு நடிப்பிலிருந்து முழுமையாக விலகி இருந்தவர், தற்போது ஜீ ஸ்டுடியோ ஒரிஜினல் நிறுவனம் தயாரிக்கும் இணைய தொடரில் நடிக்கவிருக்கிறார்.

சாந்திப்பிரியா

இதையும் படிங்க:கிறிஸ்துமஸ் விடுமுறையைக் குறிவைத்த டொவினோ தாமஸ்

Last Updated : Sep 23, 2021, 7:00 PM IST

ABOUT THE AUTHOR

...view details