தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முன்னாள் அமைச்சர் மீதான புகாரை வேறு பிரிவிற்கு மாற்றிய காவல் ஆணையர்! - actress santhini complaint

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது திருமணம் செய்து கொள்வதாக மோசடி செய்ததாகவும், பாலியல் வன்முறை செய்ததாகவும், துணை நடிகை அளித்த புகார், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளது.

actres
மணிகண்டன்

By

Published : May 30, 2021, 6:48 AM IST

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது திரைப்பட துணை நடிகை சாந்தினி சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் தனது வழக்கறிஞர்களுடன் வந்து புகார் ஒன்றைக் கொடுத்துள்ளார்.

அதில், கடந்த 2017ஆம் ஆண்டு, தமிழ்நாடு அரசின் அதிமுக அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த தொழில்நுட்பத் துறை முன்னாள் அமைச்சரும் முன்னாள் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான மணிகண்டன், தன்னிடம் நெருக்கமாகப் பழகி திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை காட்டி ஏமாற்றிவிட்டார். அவரோடு நெருங்கிப் பழகியதால் உருவான கருவை, மூன்று முறை கருக்கலைப்புக்கு வற்புறுத்தியதாகவும், திருமணம் செய்து கொள்ள கேட்ட போது பாலியல் வன்முறையில் ஈடுபட்டார்.

மேலும், தன்னை அந்தரங்கமாகப் புகைப்படம் எடுத்து மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளார். வாட்ஸ் அப்பில் மிரட்டிய ஆதாரங்கள் , ஆடியோ மற்றும் வீடியோக்கள் ஆகிய ஆதாரங்களுடன் நடிகை சாந்தினி புகார் அளித்தார்.

முதற்கட்டமாக, மத்திய குற்றப்பிரிவில் உள்ள சைபர் கிரைம் காவல் துறை இதுதொடர்பாக விசாரிக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் நடிகைக்கு பாலியல் வன்முறை செய்ததாகவும், மூன்று முறை கருக்கலைப்பு செய்தது மற்றும் ஆபாச வீடியோவை வெளியிடுவேன் என மிரட்டியதாக தெரிவிக்கப்பட்டதால், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் பிரிவு விசாரிப்பது உகந்தது என்ற அடிப்படையில் , முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிரான புகாரை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் மாற்றியுள்ளார்.

இதைத் தொடர்ந்து, துணை ஆணையர் ஜெயலட்சுமி புகார் தொடர்பாக தனது விசாரணையைத் துவக்கியுள்ளார். முதலில் நடிகை சாந்தினியை விசாரிக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. புகார் உறுதியானால் வழக்குப்பதிவு செய்து அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details