தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மகள்களுடன் நடிகை ரோஜா - வைரலாகும் புகைப்படம்! - சென்னை மாவட்டம் செய்திகள்

நடிகை ரோஜா தனது மகள்களுடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மகள்களுடன் ரோஜா
மகள்களுடன் ரோஜா

By

Published : Apr 28, 2021, 7:48 PM IST

தமிழில் செம்பருத்தி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ரோஜா. அதன்பிறகு தமிழில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து பிரபலமானார்.

பிறகு தெலுங்கு சினிமாவிலும் நடித்து பிரபலமான அவர் இயக்குனர் ஆர்கே செல்வமணியை திருமணம் செய்துகொண்டார். இருவருக்கும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன.

பின் அரசியலில் சேர்ந்த ரோஜா ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் நகரி தொகுதி எம்எல்ஏவாக உள்ளார்.

மகள்களுடன் ரோஜா

இந்நிலையில் இவருக்கு கர்ப்பப்பையில் பிரச்னை ஏற்பட்டதால், கடந்த மாதம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அறுவைசிகிச்சை நடைபெற்றது.

தற்போது வீட்டில் ஓய்வு எடுத்து வரும் ரோஜா, தனது இரண்டு மகள்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details