தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கிஷோர் கே சாமி மீது புகார் அளித்த நடிகை! - நடிகை ரோகினி புகார்

தன்னை பற்றியும், மறைந்த நடிகர் ரகுவரன் குறித்தும் இழிவான கருத்து பதிவிட்டதாக கிஷோர் கே சாமி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நடிகை ரோகினி புகார் அளித்துள்ளார்.

actress-rohini-complaint-against-kishore-k-sami
actress-rohini-complaint-against-kishore-k-sami

By

Published : Jun 17, 2021, 3:41 PM IST

சென்னை : திரைப்பட நடிகையும்,மறைந்த நடிகர் ரகுவரனின் மனைவியுமான ரோகினி ஆன்லைன் மூலம பாஜக ஆதரவாளரான கிஷோர் கே சாமி மீது புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில், ”கடந்த 2014 ஆம் ஆண்டு கிஷோர்.கே.சாமி தனது வலைதள பக்கத்தில் மறைந்த நடிகர் ரகுவரன் குறித்தும், தன்னை பற்றியும் இழிவுப்படுத்தும் வகையில் கருத்தை பதிவிட்டிருந்தார்.

இதனால் மன உளைச்சல் ஏற்பட்டாதாகவும், இதே போல் பாஜக மூத்த தலைவர்களான பொன்.ராதாகிருஷ்ணன், இல கணேசன்,வானதி ஸ்ரீனிவாசன்,தமிழிசை ஆகியோர் குறித்தும் அவதூறு பரப்பும் வகையில் கருத்துகளை பதிவிட்டிருந்தார்.இதனால் கிஷோர் கே சாமி மீது நடவடிக்கை எடுக்கக் வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே கிஷோர் கே சாமி முன்னாள் முதலமைச்சர் குறித்தும், பெண் பத்திரிகையாளர் குறித்தும் அவதூறு பரப்பும் வகையில் கருத்துகளை பதிவிட்டதாக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து விசிக துணை பொதுசெயலாளர் வன்னியரச, நடிகை ரோகினி ஆகியோர் கிஷோர் கே சாமி மீது புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க:

'காணாமல்போன கோயில் சிலைகளைக் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுங்கள்' - உயர் நீதிமன்றம்

ABOUT THE AUTHOR

...view details