தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சொகுசு கார்.. 100க்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள்.. இது என்னடா ராஜமாதாவுக்கு வந்த சோதனை!

சென்னை: நடிகை ரம்யா கிருஷ்ணன் காரில் மதுபாட்டில்களை கடத்தி வந்த ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்தனர்.

ரம்யா கிருஷ்ணன்
ரம்யா கிருஷ்ணன்

By

Published : Jun 13, 2020, 5:32 PM IST

தமிழ்நாட்டில் சென்னை நீங்கலாக அனைத்து மாவட்டங்களிலும் மதுபான கடைகளை திறக்க மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இந்நிலையில் மற்ற மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு மதுபானங்கள் கடத்தப்படுவதாக காவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இந்தத் தகவலின் பேரில் காவலர்கள் சென்னையின் எல்லைப் பகுதிகளில் தீவிர வாகன தணிக்கை சோதனை நடத்திவருகின்றனர்.

இந்நிலையில், கானாத்தூர் முட்டுக்காடு பகுதியிலுள்ள சோதனைசாவடியில், காவலர்கள் நடத்திய வாகன தணிக்கை சோதனையில் சொகுசு கார் ஒன்று சிக்கியது.

அந்தக் காருக்குள் இருந்த ஓட்டுநரை பிடித்து காவலர்கள் விசாரணை நடத்தினார்கள். அப்போது ஓட்டுநர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார்.

இதையடுத்து அவரிடம் காவலர்கள் கிடுக்கிப்பிடி விசாரணையில் இறங்கினர். அப்போது காருக்குள் 103 மதுபாட்டில்கள் கடத்திவந்திருப்பது தெரியவந்தது. மேலும், கார் ஓட்டுநர் பெயர் செல்வக்குமார் என்பதும் காரின் உரிமையாளர் நடிகை ரம்யா கிருஷ்ணன் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து அவரை காவல்நிலையத்துக்கு அழைத்து சென்றனர். மேலும் நடிகை ரம்யா கிருஷ்ணனுக்கும் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து நடிகை ரம்யா கிருஷ்ணன் கார் ஓட்டுநரை பிணையில் அழைத்துச் சென்றார்.

இதையும் படிங்க: 7 நாளில் 'தேவர்மகன்' ஸ்கிரிப்டை எழுதிமுடித்த கமல்ஹாசன்!

ABOUT THE AUTHOR

...view details