தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நடிகை மீரா மிதுனை ஏப்ரல் 4ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க உத்தரவு - Actress meera mithun arrested

வழக்கு விசாரணைக்கு ஆஜராகாததால் பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு கைது செய்யப்பட்ட நடிகை மீராமிதுனை ஏப்ரல் 4ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகை மீரா மிதுனை ஏப்ரல் 4 வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவு
நடிகை மீரா மிதுனை ஏப்ரல் 4 வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவு

By

Published : Mar 25, 2022, 4:49 PM IST

Updated : Mar 25, 2022, 6:44 PM IST

சென்னை:பட்டியலினத்தவர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை தெரிவித்த வழக்கில், பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு கைது செய்யப்பட்ட நடிகை மீரா மிதுனை வரும் ஏப்ரல் 4ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சர்ச்சை வழக்கில் மீரா மிதுன்

பட்டியலினத்தவர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளைத் தெரிவித்ததாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் அளிக்கப்பட்டப் புகாரில், நடிகையும், மாடல் அழகியுமான மீரா மிதுன், அவருக்கு உடந்தையாக இருந்த அவரது நண்பர் சாம் அபிஷேக் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வழக்குப் பதிவு செய்து, இருவரையும் கைது செய்தனர்.

அதன்பின்பு இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கில் அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் முந்தைய விசாரணையின்போது மீரா மிதுன் ஆஜராகவில்லை. இதையடுத்து, அவருக்கு எதிராக ஜாமீனில் வெளி வர முடியாத பிடிவாரண்டை சென்னை மாவட்ட முதன்மை நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து இன்று (மார்ச் 25) கைது செய்யப்பட்ட நடிகை மீரா மிதுன் சென்னை மாவட்ட முதன்மை நீதிபதி அல்லி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.

காவலில் அடைக்க உத்தரவு

பின்னர் நீதிபதி, ஏப்ரல் 4ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, காவல்துறை பாதுகாப்புடன் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார். வழக்கு விசாரணைக்கு ஆஜராகாததால் பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு கைது செய்யப்பட்ட நடிகை மீராமிதுனை ஏப்ரல் 4ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க:அம்பேத்கர் பிறந்த நாளில் தேசிய விடுமுறை- திருமாவளவன் எம்.பி., கோரிக்கை!

Last Updated : Mar 25, 2022, 6:44 PM IST

ABOUT THE AUTHOR

...view details