சென்னை:பட்டியலினத்தவர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நடிகையும், மாடல் அழகியுமான மீரா மிதுன், அவரது நண்பர் சாம் அபிஷேக் ஆகியோர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினரிடம் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் புகார் அளிக்கப்பட்டது.
அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அதன்பின்பு இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
இந்த வழக்கில் அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன்பு விசாரணைக்கு வந்தபோது, மீரா மிதுன் ஆஜராகவில்லை.