சென்னை:நிரஞ்சனி அசோகன் நடித்துள்ள 'நீ போதும்' என்ற ஆல்பம் வெளியீட்டு விழா நேற்று (ஜூன் 14) சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகை மீனா, நிரஞ்சனி அசோகன், நடிகர் பரத், ஷ்யாம் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய நிரஞ்சனி அசோகன், "இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல். பல தடைகளை கடந்து இந்த பாடல் எடுக்கப்பட்டு உள்ளது. உங்களுக்கு இந்த பாடல் பிடிக்கும் என்று நம்புகிறேன் என்றும் இந்த பாடலுக்கு உதவியாக இருந்த நடிகர் ஆர்யா, ரேவதி உள்ளிட்டோருக்கு நன்றி என்றும் கூறினார்.
அதனை தொடர்ந்து பேசிய நடிகர் பரத், நிரஞ்சனி என்னுடைய யாக்கை திரி படத்தில் எனக்கு ஜோடியாக நடித்து உள்ளார். அவர் இந்த பாடலிலும் சிறப்பாக நடித்து உள்ளார். அவருக்கு எனது வாழ்த்துகள். அடுத்து என்ன பண்ண வேண்டும் என்று எப்போதும் நிரஞ்சனி யோசித்து கொண்டே இருப்பார்.மேலும் அவர் இயல்பாக நடிக்கக் கூடிய நடிகை என்றும் தெரிவித்தார்.
பின்னர் பேசிய நடிகர் ஷ்யாம், "என் வீட்டில் 'நீ போதும்' என்று சொன்னது இல்லை. நீ தேவை இல்லை என்றுதான் சொல்கிறார்கள். தற்போது பெண்கள் எவரும் ஆண்களை எதிர்பார்த்து இருப்பது இல்லை என்றார். மேலும் சினிமாவில் என்னை நம்பித் தான் வந்தேன். அப்பாவோ மாமனாரோ யாரும் இல்லை. நிரஞ்சனி இந்த பாடலில் நன்றாக நடித்து உள்ளார்.மேலும், நான் இந்த நிகழ்ச்சிக்கு மீனா வருகிறார்கள் என்பதால் தான் வந்தேன். அவரை எனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் மேலும் நடிகர் பரத் எனது கனவில் வந்துகொண்டே இருக்கிறார் என்று தெரிவித்தார்.