கரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக, இந்தியாவில் தேசிய ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்துவருகிறது. இந்த உத்தரவு காரணமாக, தமிழ்நாட்டில் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் அரசு மூடியுள்ளது. சென்னை தி.நகர் நீலகண்டா மேத்தா தெருவில் வசித்து வருபவர் பூபதி.
மது கிடைக்காத விரக்தி - தூக்க மாத்திரை சாப்பிட்ட 'ஆச்சி' மகன்! - தூக்க மாத்திரை உட்கொண்ட மனோராமாவின் மகன்
சென்னை: மது கிடைக்காத விரக்தியில் மறைந்த நடிகை மனோரமாவின் மகன் அதிகளவு தூக்க மாத்திரை சாப்பிட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவர் மறைந்த திரைப்பட நடிகை மனோரமாவின் மகன் ஆவார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. மதுபானக் கடை மூடப்பட்டிருக்கும் காரணத்தால் பூபதிக்கு மது கிடைக்கவில்லை. இதனால் மன உளைச்சலில் தூக்கம் இழந்த பூபதி தூக்கம் வர வேண்டி நேற்றிரவு (ஏப்.7) அதிகளவு தூக்கமாத்திரை சாப்பிட்டுள்ளார்.
மாத்திரை சாப்பிட்ட சிலமணி நேரத்திலேயே பூபதிக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது. இதைப் பார்த்த வீட்டில் உள்ளவர்கள் உடனே அவரை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து, தற்போது நலமாக உள்ளதாகக் கூறுகின்றனர். இச்சம்பவம் குறித்து மாம்பலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.