தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

போற உசுரு மழைலயே போகட்டும் - குஷ்புவை கலாய்த்த நெட்டிசன்!

தேவைப்படுபவர்களுக்கு ஆதரவளிப்பதற்கும் உதவுவதற்கும் செய்ய வேண்டியதைச் செய்ய நான் நேரில் இருக்க வேண்டியதில்லை. இதற்கென என்னிடம் ஒரு குழு உள்ளது என குஷ்பு நெட்டிசன்கள் கேள்விக்கு காட்டமாகப் பதிலளித்துள்ளார்.

By

Published : Nov 12, 2021, 4:41 PM IST

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை காரணமாக சென்னை தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்துவருகிறது. இதனிடையே வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஆந்திரா-சென்னைக்கு இடையே நேற்று (நவம்பர் 11) கரையைக் கடந்தது. இதன் காரணமாக சென்னை, புறநகர்ப் பகுதிகளில் கனமழை பெய்தது.

மழையால் சாலை, வீடுகளில் வெள்ள நீர் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழை நீரை வெளியேற்றும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் இரவு, பகலாக ஈடுபட்டுள்ளனர்.

முதலமைச்சர் ஸ்டாலின் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரடியாகச் சென்று பார்வையிட்டு ஆய்வுசெய்து, மக்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கிவருகிறார். இந்நிலையில், நடிகையும் பாஜக பிரமுகருமான குஷ்பு களத்திற்கு வந்து மக்களைச் சந்திக்கவில்லை என நெட்டிசன்கள் சமூக வலைதளத்தில் கருத்துகளைப் பதிவிட்டனர்.

குஷ்பு ட்வீட்

இதற்குப் பதிலளிக்கும்விதமாக குஷ்பு தனது ட்விட்டரில், நான் களத்தில் இல்லை எனக் கேள்வி எழுப்பும் லூசர்ஸ்க்கு, தேவைப்படுபவர்களுக்கு ஆதரவளிப்பதற்கும் உதவுவதற்கும் செய்ய வேண்டியதைச் செய்ய நான் நேரில் இருக்க வேண்டியதில்லை. இதற்கு என்னிடம் ஒரு குழு உள்ளது. எனவே நீங்கள் எப்போதும் போன்று உங்களது மொபைல் போனை நோண்டிக்கொண்டிருங்கள் எனப் பதிவிட்டிருந்தார்.

இதைப்பார்த்த ட்விட்டவர்வாசி ஒருவர், மேம் இதுபோன்று கருத்துகளைப் பதிவிடுபவர்களை விட்டுத்தள்ளுங்கள். நீங்கள் வீட்டில் பாதுகாப்பாக இருங்கள். தயவுசெய்து உங்கள் கணவர் சுந்தர் சியிடம் சொல்லுங்கள் அரண்மனை 4 எடுக்க வேண்டாம் என, போற உசுரு மழைலயே போகட்டும் எனப் பதிவிட்டிருந்தார். இந்தக் கருத்தானது தற்போது சமூக வலைதளங்களில் கவனத்தை ஈர்த்துவருகின்றது.

இதையும் படிங்க: குஷ்புவின் ட்விட்டர் பக்கத்தை முடக்கியது யார்? சைபர் கிரைம் காவல் துறை ட்விட்டருக்கு கடிதம்

ABOUT THE AUTHOR

...view details