தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருமாவளவனை திமுக., காங்கிரஸ் கண்டிக்காதது ஏன்? நடிகை குஷ்பு கேள்வி - பாஜக குஷ்பூ

பெண்கள் குறித்து அவதூறாக பேசிய திருமாவளவன் மன்னிப்பு கேட்க வேண்டும் என நடிகை குஷ்பு வலியுறுத்தியுள்ளார். மேலும் திருமாவளவனை திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கண்டிக்காதது ஏன் என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

நடிகை குஷ்பு செய்தியாளர் சந்திப்பு
நடிகை குஷ்பு செய்தியாளர் சந்திப்பு

By

Published : Oct 23, 2020, 8:10 PM IST

சென்னை தியாகராய நகரிலுள்ள மாநில பாஜக தலைமையகமான கமலாலயத்தில் குஷ்பூ செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது, “விசிக தலைவர் திருமாவளவன் பேசிய காணொலியில், அவர் பேசிய விதம் மிகவும் கண்டிக்கதக்கதாக உள்ளது.

பெண்களை கேவலமாக இழிவாக பேசியுள்ளார். இது மதப் பிரச்சனை அல்ல ஒரு பெண்ணை பற்றி பேசும்போது இப்படி பேசலாமா? அதுவும் ஒரு கட்சி தலைவராக இருந்து கொண்டு பேசலாமா? நிச்சயமாக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்.

விசிகவுடன் கூட்டணி கட்சியிலுள்ள திமுக, காங்கிரஸ் தலைவர்கள் இதற்கு கண்டனம் தெரிவிக்கவில்லை. திமுக , காங்கிரஸ், கனிமொழி ஆகியோர் இதற்கு என்ன பதில் கூற போகிறார்கள்.

காங்கிரஸில் இருந்து நான் வெளியேறிய போது என்னை வெறும் நடிகை என்று கூறினார்கள். இப்போது பெண்களை பரத்தையர் என்று சொல்லும் போது காங்கிரஸ் பேசாமல் இருப்பது சரியல்ல, காங்கிரஸ் கட்சித் தலைவர், திருமாவளவனை கேள்வி எழுப்பி ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை.

நடிகை குஷ்பு செய்தியாளர் சந்திப்பு

தைரியமுள்ளதா? நான் காங்கிரஸ், திமுக தலைவர்களுக்கு வெளிப்படையாக சவால் விடுகிறேன். பெண்கள் குறித்து அவதூறாக பேசி உள்ள திருமாவளவனை நீங்கள் ஏன் கண்டிக்கவில்லை? பெண் என்று வரும் போது கூட்டணிக்கு அப்பாற்பட்டு இதனை கண்டிக்க வேண்டும். பெண்ணை கட்சி தாவினால் கேவலம் என்று சொல்லும் காங்கிரஸ் தலைவர், பெண்ணை இழிவாக பேசும் போது அமைதியாக இருக்கலாமா? மனு தர்மத்தில் பெண்கள் குறித்து குறிப்பிட்டுள்ளதை தவறாக புரிந்துகொண்டு திருமாவளவன் பேசியுள்ளார்.

நான் பேசாத கருத்தை பேசியதாக கூறப்பட்ட வழக்கில் நீதிமன்றம் வரை சென்று வெற்றி பெற்றுள்ளேன். ஒரு பெண் தேவையில்லாமல் சீண்டினால் என்ன நடக்கும் என்பதை திருமாவளவனுக்கு ஏற்கனவே நான் காட்டிவிட்டேன். மனுதர்மத்தை எரிக்கப் போவதாக நாளை(அக்.24) விடுதலை சிறுத்தைகள் கட்சி, அறிவித்துள்ள போராட்டம் மக்களை திசை திருப்பும் போராட்ட அறிவிப்பாகும்.

நடிகை குஷ்பு செய்தியாளர் சந்திப்பு

தமிழ்நாடு மாணவர்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்று தான் பாஜக நினைக்கிறது, உள் ஒதுக்கீடு விவகாரத்தில் ஆளுநர் நேரம் கேட்பது சட்ட ரீதியான முடிவு எடுப்பதற்காக இருக்கலாம். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியினர் ராஜிவ் கொலை வழக்கில் சிறையிலிருக்கும் ஏழு தமிழர்கள் விடுதலைக்காக ஏன்? போராடவில்லை.

திருமாவளவன் உள்ள கூட்டணியில் உள்ளவர்கள் பெரியாரின் கொள்கையை பின்பற்றுகிறோம் என கூறிக்கொண்டிருக்க, அவர்களது வீட்டில் உள்ள பெண்கள் கோயிலுக்கு செல்லுவதை தடுக்க வில்லை, இப்படி இருக்க பெரியார் கொள்கைகள் பின்பற்றும் கட்சிகள், யாரை கூறுகிறேன் என்று உங்களுக்கே தெரியும்.

தேர்தலில் வென்றால் கரோனா தடுப்பூசி இலவசமாக கொடுப்போம் என பீகாரில் பாஜக தேர்தல் அறிக்கை குறித்து கமல்ஹாசன் விமர்சித்த கருத்திற்கு எங்கள் மாநில தலைவர் பதில் கூறுவார் , நான் விமர்சிக்க விரும்பவில்லை. சபரிமலையை பொறுத்தவரை பல ஆண்டுகளான நம்பிக்கை குறித்து முன்னரே பேசிவிட்டேன்.

மேலும் முத்தலாக் சட்டத்தையும் கொண்டு வந்தது பிரதமர் மோடி தான். தேர்தல் நேரத்தில் பாஜக கூட்டணி குறித்தும், முதலமச்ச்ர் வேட்பாளர் குறித்தும் பிரதமர் மோடி, தேசிய பாஜக தலைவர் நட்டா முடிவு செய்வார்கள்” எனத் தெரிவித்தார்

இதையும் படிங்க: எதிர்க்கட்சிகளுக்கு செக் வைத்த மாயாவதி; மாநிலங்களவை தேர்தலில் வெற்றி யாருக்கு?

ABOUT THE AUTHOR

...view details