தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'கர்ப்பம் ஆவதற்கு முன்பே குழந்தைக்கு பெயர் வைக்க முடியாது' - நடிகை கஸ்தூரி - கிறிஸ்துமஸ் கொண்டாட்ட விழாவில் கஸ்தூரி

சென்னை: பாலியல் கொடூரச் சம்பவங்கள் தொடர்பாக, மக்களின் கருத்துகளைத் தான் ராகுல் காந்தி பிரதிபலித்திருக்கிறார் என நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

Kasturi
Kasturi

By

Published : Dec 15, 2019, 10:17 AM IST

சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர உணவகத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டத்தை நடிகை கஸ்தூரி தொடங்கி வைத்தார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து அவர் கூறியாதாவது, ' இந்து மதம் என்ற பெயரில் மக்களைப் பிளவுபடுத்தக் கூடிய செயல் அரங்கேறி வருகிறது. பிரிவினைவாதம் பற்றி பேசும், செயல்படும் கூட்டம் இந்தியாவில் இருக்கிறது.

எப்போதும் இல்லாத அளவிற்கு நாட்டில் பாலியல் கொடூரச் சம்பவங்கள் அதிக அளவில் நடைபெறுகின்றன. இது தொடர்பாக மக்களின் கருத்துகளை தான் ராகுல் காந்தி பிரதிபலித்திருக்கிறார். அவருடைய கருத்தில் தவறு எதுவும் இல்லை' என்று கூறிய அவர் தொடர்ந்து பேசுகையில், ' உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுமா; நடைபெறாதா என்ற நிலையில், உள்ளாட்சித் தேர்தல் கலாட்டா மட்டும் நடந்து வருகிறது. கர்ப்பம் ஆவதற்கு முன்பே குழந்தைக்கு பெயர் வைக்க முடியாது. அதேபோல் ரஜினி முதலில் கட்சி ஆரம்பித்தால் தான் அவர் யாருடன் கூட்டணி வைப்பார் என்பது எல்லாம் தெரிய வரும்' என்றும் கூறினார்.

பத்திரிகையாளரைச் சந்தித்த கஸ்தூரி

இதையும் வாசிங்க: எண்ணித்துணிக: ஜெய்யின் புதிய திரைப்படம்!

ABOUT THE AUTHOR

...view details