தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மீண்டும் அம்மா வீட்டுக்கு வந்த நடிகை ஹன்சிகா... என்ன காரணம்? - Actress Hansika Motwani on marrigae issue

படப்பிடிப்பில் கலந்து கொள்ள சென்னை வந்த நடிகை ஹன்சிகாவுக்கு விமான நிலையத்தில் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

நடிகை ஹன்சிகா
நடிகை ஹன்சிகா

By

Published : Jan 30, 2023, 4:56 PM IST

மீண்டும் அம்மா வீட்டுக்கு வந்த நடிகை ஹன்சிகா.. என்ன காரணம்?

சென்னை:திருமணம் முடிந்து முதல்முறையாக சென்னை வந்த ஹன்சிகாவிற்கு விமான நிலையத்தில் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஹன்சிகா மோத்வானி, கடந்த ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி தனது நீண்ட நாள் நண்பரும், தொழில் பங்குதாரருமான சோஹைல் கதுரியாவை திருமணம் செய்து கொண்டார்.

நடிகை ஹன்சிகா

இருவரும் இணைந்து ஈவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம் நடத்தி வரும் நிலையில், அவர்களுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த நவம்பர் 2ஆம் தேதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமணம் பற்றிய தகவலை ஹன்சிகா உறுதி செய்தார்.

இதையடுத்து அவர்களது திருமணம் ஜெய்ப்பூரில் உள்ள 450 வருட பழமையான முண்டோடா கோட்டை மற்றும் அரண்மனையில் நடைபெற்றது. தொடர்ந்து இருவரும் தேன் நிலவுக்காக ஆஸ்திரியா சென்றனர். இவர்களது திருமண வீடியோயை பிரபல ஓடிடி தளமான ஹாட் ஸ்டார் வாங்கியது.

நடிகை ஹன்சிகா

விமான நிலையம் வந்த ஹன்சிகாவுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பூங்கொத்து கொடுத்தும், பூக்களை வழங்கியும் நடிகை ஹன்சிகாவை இன்ப மழையில் ரசிகர்கள் திக்குமுக்காடச் செய்தனர். தொடர்ந்து நடிகை ஹன்சிகா செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அவர் கூறியதாவது, "எல்லோருக்கு வணக்கம். அனைவருக்கும் முதலில் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு குழந்தை மீண்டும் அவளது தாய் வீட்டிற்கு வந்தது போல உணர்கிறேன். மாலை, ரோஜா பூக்கள் கொடுத்த அனைவருக்கும் என்னுடைய நன்றி. நந்த கோபால் சாரின் படத்தில் நடிக்கிறேன்.

இன்று அந்தப்படத்தின் படபிடிப்பு தொடங்குகிறது. இந்த வருடத்தில் மட்டும் நான் 7 படங்களில் நடிக்கிறேன். இந்த வருடம் எனக்கு உண்மையில் அதிர்ஷ்டம் நிறைந்த ஆண்டாக இருக்கிறது. கல்யாண வாழ்கை ரொம்ப நன்றாக இருக்கிறது. சந்தோஷமாக அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். இன்றைய தலைமுறை எல்லோரையும் சமமாக பார்க்கிறார்கள்.

இங்கு அனைவருமே சமம். நான் இன்று(ஜன.30) மீண்டும் படப்பிடிப்புக்காக வந்திருக்கிறேன். நீங்கள் என்னை வரவழைக்க வந்துள்ளீர்கள். இதற்குமேல் எனக்கு என்ன வேண்டும். திருமணத்திற்குப் பிறகு என்னுடைய வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள ஒரே மாற்றம் நான் அணிந்திருக்கும் மோதிரம் தான். மற்றபடி எல்லாமே ஒன்றுதான்” என்று கூறினார்.

இதையும் படிங்க:இளைஞர் உயிரை பலி வாங்கியதா பரோட்டா..? சென்னையில் நடந்தது என்ன?

ABOUT THE AUTHOR

...view details