தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நடிகை காயத்ரி ரகுராம் பாஜகவிலிருந்து தற்காலிக நீக்கம்; சூர்யா சிவாவுக்கு தடை! - பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை

நடிகை காயத்ரி ரகுராம் பாஜகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதால், கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் அவருடன் கட்சி சார்பாக தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டாம் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

actress
actress

By

Published : Nov 22, 2022, 4:02 PM IST

சென்னை: காயத்ரி ரகுராம் நீக்கம் குறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநிலத் தலைவர் காயத்ரி ரகுராம் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களிலும் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதால், கட்சியில் அவர் வகித்து வரும் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ஆறு மாத காலத்திற்கு நீக்கப்படுகிறார்.

ஆகவே, கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவர்களிடம் கட்சி சார்பாக எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

சூர்யா சிவா குறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மையினர் அணி தலைவர் டெய்சி சரணுக்கும், ஓபிசி அணியின் மாநில பொதுச்செயலாளர் சூர்யா சிவாவுக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடல் ஒன்று இன்று காலை என் கவனத்திற்கு வந்தது. இந்த சம்பவத்தை விசாரித்து கட்சி தலைமைக்கு அடுத்த 7 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத் தலைவரும், ஒழுங்கு குழுவின் நடவடிக்கை தலைவருமான கனக சபாபதி அவர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒழுங்கு நடவடிக்கைக் குழு தனது அறிக்கையை சமர்ப்பிக்கும் வரை ஓபிசி அணியின் மாநில பொதுச்செயலாளர் சூர்யா சிவா கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம் என்று அறிவுறுத்துகிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:காயத்ரி ரகுராம் பதவி பறிப்பு; பாஜக மாநில நிர்வாகிகளின் புதிய பட்டியல்!

ABOUT THE AUTHOR

...view details