சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஆறாம் தேதி நடைபெற உள்ள நிலையில், பாஜகவைச் சேர்ந்த நடிகை கௌதமி தொடர்ந்து பாஜக, அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.
முன்னதாக திருப்பூர் மாவட்டம், தாராபுரம் தனித்தொகுதியில், பாஜக மாநிலத் தலைவர் எல்முருகனை ஆதரித்து கௌதமி பரப்புரையில் ஈடுபட்டபோது, 10 கிலோமீட்டர் தூரம் வரை தாங்கள் சென்ற பரப்புரை வாகனத்தை ஓட்டி மக்களிடம் லைக்ஸ் அள்ளினார்.
இந்நிலையில், பரப்புரைக் கூட்டத்தில் மீண்டும் தான் வேன் ஓட்டிய புகைப்படங்களை ட்விட்டரில் கௌதமி பகிர்ந்துள்ளார்.
அதில், ”எனது முதல் காரை மீண்டும் ஓட்டுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நான் டெம்போ ட்ராவலர் ஓட்டக் கற்றுள்ளேன். மீண்டும் இவ்வாறு வண்டி ஓட்டுவது மகிழ்ச்சியாக உள்ளது. பரப்புரையின்போது எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது போனஸ்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:’கழகங்கள் கல்யாணம் மட்டும்தான் செய்து வைக்கவில்லை’: ராதிகா சரத்குமார்