தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அமைச்சர் மணிகண்டனிடம் ரூ.10 கோடி கேட்டு நடிகை வழக்கு - சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: திருமணம் செய்வதாகக் கூறி மோசடி செய்த முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டனிடம் 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நடிகை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

மணிகண்டன்
மணிகண்டன்

By

Published : Jul 22, 2021, 11:28 PM IST

நடிகையைத் திருமணம் செய்துகொள்வதாக மோசடி செய்த விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அப்புகாரின் அடிப்படையில் தலைமறைவாக இருந்த மணிகண்டனைக் காவல் துறையினர் கடந்த 20ஆம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனையடுத்து அவருக்கு நிபந்தனை பிணை வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் அவர் மீது புகார் அளித்த நடிகை, மணிகண்டன் தனக்குச் செய்த மோசடி தொடர்பாக 10 கோடி ரூபாயை இழப்பீடாக வழங்க வேண்டும் எனக் கூறி சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கொடுத்த மனுவில், "சென்னையில் இருந்துகொண்டு வழக்கை நடத்த வேண்டும் என்ற காரணத்தினாலும் தனக்கு மாதாந்திர இடைக்கால தொகை வழங்க வேண்டும்" என கோரியுள்ளார்.

திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழும்போது பிரச்னை ஏற்பட்டால் இழப்பீடு கோருவதற்கான நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நடிகை வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு மீதான விசாரணையை வருகிற ஆகஸ்ட் 5ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக சைதாப்பேட்டை நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:முன்னாள் அமைச்சரின் மோசடி வழக்கு: முறையாக விசாரிக்காத பெண் ஆய்வாளர் இடமாற்றம்

ABOUT THE AUTHOR

...view details