சென்னை: விருகம்பாக்கம் மல்லிகை அவன்யூ பகுதியில் வசித்து வந்த பவுலின் ஜெஸிகா என்கிற தீபா, சினிமாவில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்துள்ளார். 'வாய்தா' என்ற திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இந்நிலையில், நேற்று (செப் 17) தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தீபாவின் உறவினர்கள் நீண்ட நேரமாக தொடர்புகொள்ள முயற்சித்தும் அவர் அழைபேசியை எடுக்காததால், அவரது நண்பர் பிரபாகரனுக்குத் தொடர்புகொண்டுள்ளனர். இதையடுத்து பிராபகரன் தீபாவின் வீட்டிற்குச் சென்று பார்த்த போது, தீபா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதனைத்தொடர்ந்து தீபாவில் சகோதரர் தினேஷிற்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்தத் தகவலின் அடிப்படையில், நேற்று (செப் 17) இரவு சென்னை வந்த தினேஷ், கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
முதற்கட்ட விசாரணையில், தீபா தற்கொலை கடிதம் கிடைக்கப்பெற்றது. அதில், “ஒருவரை உயிருக்கு உயிராக காதலித்தேன், ஆனால் காதல் கை கூடவில்லை. அதனால் இந்த உலகத்தை விட்டுப் பிரிந்து செல்கிறேன். சாவுக்கு யாரும் காரணம் இல்லை” எனக் குறிப்பிட்டிருந்ததாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ஆறு நாட்களில் புதுமணத்தம்பதி தற்கொலை