தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சின்னத்திரை நடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத் பணமோசடி வழக்கில் கைது! - Medical study fraud

hemnath
hemnath

By

Published : Jan 5, 2021, 1:37 PM IST

Updated : Jan 5, 2021, 3:40 PM IST

13:35 January 05

சென்னை: பண மோசடி வழக்கில் ஹேம்நாத்தை சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் கைதுசெய்தனர்.

சின்னத்திரை நடிகை சித்ராவை தற்கொலைக்குத் தூண்டிய வழக்கில் கைதுசெய்யப்பட்டு ஹேம்நாத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் மீது 2015ஆம் ஆண்டு ஜெ.ஜெ. நகர் காவல் நிலையத்தில் பணமோசடி வழக்குப் பதிவுசெய்யப்பட்டிருந்தது. 

மருத்துவப் படிப்பிற்கு சீட் வாங்கிக் கொடுப்பதாகக் கூறி ஒரு கோடியே 5 லட்சம் ரூபாய் பண மோசடி செய்ததாக ஹேம்நாத் மீது ஜெ.ஜெ. நகர் காவல் நிலையத்தில் 2012ஆம் ஆண்டு புகார் அளிக்கப்பட்டிருந்தது.

ஆனால், அந்தப் புகார் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்யவில்லை எனக் கூறப்படுகிறது. 2015ஆம் ஆண்டு ஹேம்நாத் மீது பண மோசடி, கொலை மிரட்டல் ஆகிய இரண்டு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தற்போது சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு ஹேம்நாத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஜெ.ஜெ. நகர் காவல் நிலையத்தில் பதிவுசெய்யப்பட்ட வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. இந்தப் பண மோசடி வழக்குத் தொடர்பாகச் சிறையில் இருக்கும் ஹேம்நாத்தை சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் கைதுசெய்து சிறைக் காவலில் எடுத்து விசாரித்துவருகின்றனர்.

2012ஆம் ஆண்டு ஹேம்நாத் ஜெ.ஜெ. நகரைச் சேர்ந்த ஒருவரிடம் ஒரு கோடியே ஐந்து லட்சம் ரூபாய் பணத்தை வாங்கிவிட்டு மோசடி செய்திருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க:கங்குலி நாளை டிஸ்சார்ஜ் - மருத்துவமனை தகவல்

Last Updated : Jan 5, 2021, 3:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details