தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிரான ஆதாரங்கள் சேகரிக்கும் பணி : காவல்துறை தீவிரம்

சென்னை: முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தேவையான ஆதாரங்களை சேகரிக்கும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

By

Published : Jun 1, 2021, 1:56 PM IST

முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிரான ஆதாரங்கள்
முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிரான ஆதாரங்கள்

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை சாந்தினி புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் முன்னாள் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் மணிகண்டன் கடந்த 5 வருடமாக திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை காட்டி மோசடி செய்ததாக தெரிவித்துள்ளார். மூன்று முறை கட்டாய கருக்கலைப்பு செய்ய வைத்ததாகவும், அந்தரங்க புகைப்படங்களை எடுத்து மிரட்டல் விடுத்ததாகவும், பாலியல் வன்முறை செய்ததாக பல்வேறு குற்றச்சாட்டுகளை அவர் கூறியுள்ளார்.

இதையடுத்து அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலைய காவல்துறையினர், மணிகண்டன் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். கட்டாயக் கருக்கலைப்பு செய்தல், பாலியல் வன்கொடுமை, நம்பிக்கை மோசடி உள்ளிட்ட ஆறு பிரிவுகள் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவரை காவர்துறையினர் தேடி வருகின்றனர். அவர் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.

நடிகை சாந்தினிக்குக் கட்டாய கருக்கலைப்பு செய்த மருத்துவர் யார் என்பதைக் கண்டறிந்து அவருக்குச் சம்மன் அனுப்பவும், பாலியல் வன்கொடுமை புகார் அளிக்கப்பட்டுள்ளதால் நடிகை சாந்தினிக்கு மருத்துவப் பரிசோதனை செய்யவும் முடிவு செய்துள்ளனர்.

நடிகை சாந்தினி மணிகண்டனுக்கு எதிராகக் கொடுத்த வீடியோ புகைப்பட ஆதாரங்களை சைபர் கிரைம் காவல்துறையினர் ஆய்வுக்கு உட்படுத்தி வருகின்றனர். நடிகை சாந்தினியை மணிகண்டனுக்கு அறிமுகம் செய்து வைத்த பரணி என்ற நடிகரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இதனிடையே ராமநாதபுரம் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மனைவி வசந்தி புகார் ஒன்றை அளித்துள்ளார். தன் கணவர் மீது தொடுக்கப்பட்ட அவதூறு புகார் அளித்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த புகாரும் சென்னை காவல் துறைக்கு அனுப்பப்பட்டு உள்ளதாக தெரியவந்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details