சென்னை:1980-களில் அறிமுகமாகி காதல் பரிசு, காக்கிச்சட்டை, படிக்காதவன், மிஸ்டர் பாரத், விக்ரம், அன்புள்ள ரஜினிகாந்த், சகலகலா வல்லவன் உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகியாகவும், அமர்க்களம், அவன் இவன் போன்ற படங்களில் குணசித்திர நடிகையாகவும், சீரியல்களில் முக்கிய வேடத்திலும் தொடர்ந்து நடித்து வருபவர் நடிகை அம்பிகா. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
நடிகை அம்பிகா, சமூக வலைதளங்களில் அதிக ஈடுபாடு கொண்டவர். இதனிடையே புனித தோமையார் காவல் நிலையத்தில் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிரகாஷ் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக சமூக வலைதளத்தில் சென்னை காவல் துறை பதிவு செய்தது. இதுகுறித்து அம்பிகா ட்விட்டரில் கருத்து ஒன்று தெரிவித்திருக்கிறார்.