தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நடிகை அமலாபால் சொகுசு கார் விவகாரம்: சாட்டையை சொடுக்கும் புதுச்சேரி அரசு! - கேரள காவல்துறை

புதுச்சேரி: நடிகை அமலாபாலின் சொகுசு கார் புதுச்சேரியில் பதிவு செய்த விவகாரம் தொடர்பாக, மாநில சட்டத்துறை நிபுணர்களிடம் ஆலோசனை கேட்கப்பட்டுள்ளதாக அந்த மாநில போக்குவரத்து துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.

amalapaul

By

Published : Aug 29, 2019, 4:04 PM IST

சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகை அமலா பால் புதுச்சேரியில் போலி இருப்பிட சான்றிதழ் அளித்து சொகுசு கார் வாங்கி பதிவு செய்துள்ளதாக தெரிகிறது.

இது தொடர்பாக கேரள உயர்நீதி மன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் நிலையில் கேரள காவல்துறையினரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கேரள காவல்துறையினர் புதுச்சேரி மாநில போக்குவரத்து துறைக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.

இதனையடுத்து புதுச்சேரி மாநில போக்குவரத்து துறை ஆணையர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது, 'சில நாட்களுக்கு முன்பு கேரள அரசு தரப்பிலிருந்து அமலாபால் சொகுசு கார் பதிவு செய்த விவகாரம் தொடர்பான கடிதம் புதுச்சேரி அரசுக்கு வந்தது.

அமலாபால் கார் பதிவு குறித்து போக்குவரத்து ஆணையர் பதில்

தற்போது அதன் மீது நடவடிக்கை எடுக்க, மாநில சட்டத்துறை நிபுணர்களிடம் ஆலோசனை கேட்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details