தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கலாஷேத்ரா பாலியல் புகாருக்கு ஆதரவு குரல்… சர்ச்சையில் சிக்கிய நடிகை அபிராமி - வறுத்தெடுத்த சின்மயி!

பாலியல் தொல்லைக்கு ஆளான போதே வெளியில் கூறாமல் காலம் தாழ்த்தி கூறுவது ஏன் நல்ல நிலையை அடைந்த பிறகு #metoo ஹேஷ்டேக் போடுவதில் பிரயோஜனம் இல்லை என கலாஷேத்ரா பாலியல் புகாரில் கருத்துக்கூறி சர்ச்சையில் சிக்கியுள்ளார் நடிகை அபிராமி. இந்நிலையில், சின்மயி, அதற்கு கடும்கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Apr 5, 2023, 3:47 PM IST

சென்னை: திருவான்மியூரில் ஒன்றிய அரசின் கீழ் செயல்பட்டு வரும் நிறுவனம் கலாஷேத்ரா பவுண்டேஷன். ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் இந்த பவுண்டேஷன் நடத்தும் இந்தக் கல்லூரியில் பயின்று வருகின்றனர். இந்நிலையில் கலாஷேத்ரா கல்லூரியைச் சேர்ந்த முன்னாள் கேரள மாணவி, பேராசிரியர் ஹரிபத்மன் கடந்த 2019ஆம் ஆண்டு தனது முதுநிலைப் படிப்பின்போது தனக்கு பாலியல் ரீதியாக தொடர்ச்சியாக துன்புறுத்தியதாகவும், அவரின் பாலியல் தொந்தரவு காரணமாகத் தான் படிப்பை பாதியிலேயே கைவிட்டுச் சென்றதாகவும் அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இதனையடுத்து பேராசிரியர் ஹரிபத்மன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கல்லூரி மாணவிகள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து பேராசிரியர் ஹரிபத்மனை பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட மூன்று பிரிவுகளின் கீழ் அடையாறு மகளிர் போலீசார் கைது செய்தனர். பின்னர் சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவின் பேரில் 13ஆம் தேதி வரை பேராசிரியர் ஹரிபத்மனை நீதிமன்றக் காவலில் வைத்து புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் நேர்கொண்ட பார்வை, நோட்டா ஆகியப் படங்களில் நடித்த நடிகையும், கலாஷேத்ரா கல்லூரியின் முன்னாள் மாணவியுமான அபிராமி இந்த கலாஷேத்ரா பாலியல் வழக்கு குறித்து கூறிய கருத்து சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

கலாஷேத்ரா பாலியல் வழக்கு குறித்து பேசிய அவர், “நான் கலாஷேத்ரா கல்லூரியின் முன்னாள் மாணவி. எப்போதும் இது போன்ற விவகாரத்தில் ஒருவர் சார்புடைய கதையை மட்டும் தெரிந்து கொண்டு கருத்து கூறுவது நல்லதல்ல. 89 வருட பழமை வாய்ந்த நிறுவனத்தில் இப்படி ஒரு பிழை கூறுவதற்கு அவ்வாறு எதுவும் நடக்கவில்லை. கலாஷேத்ரா என்ற பெயரை உச்சரிக்க தெரியாதவர்கள் கூட கலாஷேத்ரா நிறுவனம் குறித்து அவதூறு பேசுகின்றனர்.

இந்த விவகாரத்தில் குற்றம் சுமத்தப்பட்ட ஆசிரியரின் கருத்தைக் கூற வாய்ப்பளிக்க வேண்டும். அவருக்கும் குடும்பம் உள்ளது. பாலியல் தொல்லைக்கு ஆளான போதே வெளியில் கூறாமல் காலம் தாழ்த்தி கூறுவது ஏன்? நல்ல நிலையை அடைந்த பிறகு #metoo ஹேஷ்டேக் போடுவதில் எந்தப் பிரயோஜனமும் இல்லை. நமக்கு உண்மையாக பிரச்சனை ஏற்படும்பட்சத்தில் அதற்கு அனைவரும் ஆதரவு கொடுப்பார்கள்” எனக் கூறினார்

இந்நிலையில் கலாஷேத்ரா விவகாரத்தில் அபிராமியின் கருத்துக்கு பாடகி சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக சில ஆண்டுகளுக்கு முன் புகார் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கலாஷேத்ரா பாலியல் புகாருக்கு ஆதரவு குரல்… சர்ச்சையில் சிக்கிய நடிகை அபிராமி

இதையும் படிங்க: கலாஷேத்ரா கல்லூரி பாலியல் விவகாரம்: மத்திய கலாசாரத்துறை அமைச்சர் பதவி விலக வலியுறுத்தல்!

ABOUT THE AUTHOR

...view details