தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நடிகர் சங்கத் தேர்தல் செல்லாது - உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

சென்னை: சட்டப்படி நடத்தப்படாததால் நடிகர் சங்கத் தேர்தல் செல்லாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்

By

Published : Oct 16, 2019, 8:04 AM IST

Updated : Oct 16, 2019, 1:49 PM IST

நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பான வழக்கு நீதிபதி கல்யாணசுந்தரம் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கடந்த ஜுன் 23ஆம் தேதி நடைபெற்ற நடிகர் சங்கத் தேர்தலில் 80 சதவீத உறுப்பினர்கள் வாக்களித்ததாக நடிகர் விஷால் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

மேலும், பதவி காலம் முடிந்தாலும் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படும் வரை தற்போதைய நிர்வாகிகள் பதவியில் நீடிக்கலாம் என்றும், நடிகர் சங்கத்தை நிர்வகிக்க தனி அலுவலரை நியமிப்பது தொடர்பாக தமிழக அரசு கடந்த 5ஆம் தேதி தற்போதைய நிர்வாகிகளுக்கே நோட்டீஸ் அனுப்பியதாகவும் அவர் தனது வாதத்தை முன்வைத்தார்.

இதனை மறுத்த அரசுத் தரப்பு வழக்கறிஞர், உறுப்பினர்களின் புகார் குறித்து விசாரிக்கவும், தனி அலுவலரை நியமிக்கவும் பதிவாளருக்கு அதிகாரம் உள்ளதாகக் குறிப்பிட்டார்.

ஆறு மாதங்கள் பதவி நீட்டிப்பு செய்வதற்கு நடிகர் சங்க விதிகளில் இடமில்லாததால் சங்கத்தின் குழு நடத்திய தேர்தலே செல்லாது எனவும் அவர் தெரிவித்தார். மேலும், நடிகர் சங்கத் தேர்தல் நடைமுறைகளில் தமிழ்நாடு அரசு தலையிடவில்லை எனவும் அரசுத் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். இதையடுத்து வழக்கு விசாரணை வரும் 18ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதையும் படிங்க: நடிகர் நாசர், விஷால், பொண்வண்ணனுக்கு பதிவுத் துறை நோட்டீஸ்

Last Updated : Oct 16, 2019, 1:49 PM IST

ABOUT THE AUTHOR

...view details