தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குளத்தைத் தூர்வார களமிறங்கிய நடிகர் விவேக்! - நடிகர் விவேக்

சென்னை: சுதந்திரதின விழாவை முன்னிட்டு நடிகர் விவேக் குளத்தை தூர்வாரும் பணியில் ஈடுபட்டது, பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

சென்னை

By

Published : Aug 15, 2019, 10:18 PM IST

நாடு முழுவதும் 73ஆவது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதனை சிறப்பிக்கும் வகையில் அம்பத்தூர் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் 1 லட்சம் மரக்கன்றுகள் நடும் விழாவில் கலந்துகொண்டு தொடங்கி வைத்தார் நடிகர் விவேக்.

பின்னர் மாணவிகள் மத்தியில் உற்சாகமாக உரையாடிய நடிகர் விவேக், பின்னர் அங்கிருந்து ஒரகடத்திற்கு சென்று கிரீன் கலாம் மற்றும் அம்பத்தூர் நீர் நிலைகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நடைபெற்ற குளத்தை தூர்வாரும் பணியில் ஈடுபட்டார்.

அம்பத்தூர் பகுதியில் குளத்தை தூர்வாரும் பணியில் ஈடுபட்டார் நடிகர் விவேக்

திரைப்படத்தில் சமூக கருத்துக்களை பேசி வரும் விவேக், நிஜ வாழ்க்கையிலும் களப்பணிகளில் ஈடுபட்டுவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details