தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

”விவேக் உடலை அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யவேண்டும்”- ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு - vivek latest news

சென்னை: நடிகர் விவேக் உடலை அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

விவேக்
விவேக்

By

Published : Apr 17, 2021, 1:04 PM IST

நடிகர் விவேக் உடலை அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய வேண்டும் எனத் தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நலக் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், “நடிகர் விவேக் நடிகராக மட்டுமல்லாமல் ஒரு சமூக சீர்திருத்தவாதியாகவும், சிந்தனையாளராகவும் விளங்கியவர். குறிப்பாக மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் மீது எண்ணற்ற அன்பு கொண்டு, அவரை பின்பற்றி சுற்றுச்சூழலை மேம்படுத்தப் பசுமை கலாம் என்ற அமைப்பை ஏற்படுத்தி 1 கோடிக்கும் மேலாக மரக்கன்றுகளை நட்டும் தொடர்ந்து செயலாற்றியவர். நடிப்பிலும், நிஜத்திலும் அவர்கள் மக்களுக்கும்,மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் முற்போக்கு சிந்தனைகள் தொண்டுள்ளம் சீர்திருத்தச் சிந்தனைகளும் அருக்கு இயற்கையாகவே அமைந்தது என்றால் அது மிகையாகாது.

ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு வேண்டுகோள்

அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும் பசுமை கலாம் அறக்கட்டளைக்கும் , திரைப்படத் துறையினருக்கும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவரை நடிகராக கருதாமல் சமூக சிந்தையாளராகவும், சீர்திருத்தவாதியாகவும், சுற்றுச்சூழல் ஆர்வலராக திறம்படச் செயலாற்றி விழுப்பணர்வை ஏற்படுத்திய சிந்தனையாகக் கொள்ளும் விதமாகத் தமிழ்நாடு அரசு அவரது உடலை அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:’என் நெருங்கிய நண்பர் விவேக்கின் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது’ - ரஜினி

ABOUT THE AUTHOR

...view details