இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,"பரீட்சை என்பதே மன உளைச்சல் தான். அதுவும் ஊரடங்கு நேரத்தில், அது மாணவர்களுக்கு மட்டுமல்ல, அவர்களின் பெற்றோருக்கும் பெரும் மன இறுக்கம் அளிக்கும். ஊரடங்கு முற்றிலும் தளர்த்தப்பட்ட பின் பொதுத்தேர்வை வைத்துக்கொள்ளலாமே! பள்ளிக் கல்வித்துறை தயை செய்து இதுகுறித்து பரிசீலிக்கவும்" எனப் பதிவிட்டுள்ளார்.
'பரீட்சை என்பதே மன உளைச்சல் தான்' - நடிகர் விவேக் - Minister Sengottaiyan
சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து நடிகர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் பரீட்சை என்பதே மன உளைச்சல் தான் எனப் பதிவிட்டுள்ளார்.
actor-vivek-twitter
பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு ஜூன் மாதம் 1ஆம் தேதி முதல் 12ம் தேதி வரை நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். அதற்கு பல்வேறு அரசில் கட்சியினரும், கல்வியாளர்களும் எதிர்ப்புத் தெரிவித்துவரும் நிலையில் நடிகர் விவேக் இப்படி பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:பொதுத்தேர்வை தள்ளி வைக்க வேண்டும் - ஆசிரியர்கள் வலியுறுத்தல்!