சென்னை:A.S.என்டர்டெயின்மென்ட் சார்பில் S.அலெக்சாண்டர் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தின் தொடக்க விழா நேற்று (ஆகஸ்ட் 3) நடைபெற்றது. இந்த படத்தை இயக்குநர் வி.பி.நாகேஸ்வரன் இயக்குகிறார். இவர் முன்னதாக ‘தொட்டுவிடும் தூரம்’ என்கிற படத்தை இயக்கியுள்ளார்.
இப்படத்தில் கதாநாயகனாக விக்ராந்த நடிக்கிறார். டிக்கிலோனா புகழ் ஷிரின் கஞ்ச்வாலா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் (ஜெய் பீம்) தமிழ், வேல ராமமூர்த்தி, மதுசூதனன், மாரிமுத்து, ரமா உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடிக்கின்றனர்.
சமூக அக்கறை கொண்ட படத்தில் நடிக்கும் விகராந்த் இப்படத்தை மாசாணி ஒளிப்பதிவு செய்ய இருப்பதாகவும், யுகபாரதி பாடல்களை எழுத இருப்பதாகவும், சண்டைப் பயிற்சியை ராஜசேகரும் மேற்கொள்ள இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் தொடங்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு தேனியில் தொடர்ந்து நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.
தென் மாவட்டங்களின் வாழ்வியல் சார்ந்து சமூக அக்கறை மற்றும் ஆக்சன் கலந்த குடும்பப் பாங்கான கதை அம்சத்துடன் இந்த படம் உருவாக இருப்பதாகக் கூறப்படுகிறது. விக்ராந்த் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் இன்னொரு கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் ஒருவர் நடிக்க உள்ளார். அவருடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: சமுத்திரக்கனி - தம்பி ராமையா காம்போ... உருவாகும் புதிய படம்...