தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கௌரவ டாக்டர் பட்டம் பெற்ற நடிகர் விஜய் விஸ்வா! - விஜய் விஸ்வா படங்கள்

சென்னை: கரோனா காலங்களில் மக்களுக்கு சேவை செய்ததற்காக ’சர்வதேச அமைதி தமிழ் பல்கலைக்கழகம்' நடிகர் விஜய் விஸ்வாவுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியது.

vijay
vijay

By

Published : Oct 5, 2021, 3:25 PM IST

'சர்வதேச அமைதி தமிழ் பல்கலைக்கழகம்' சார்பில் மதுரையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் வைத்து பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு சென்னை மாவட்ட நீதிபதி என்.வைத்தியலிங்கம் தலைமை தாங்கினார்.

நடிகர் விஜய் விஸ்வா

அப்போது 2020 - 2021ஆம் ஆண்டு கரோனா காலங்களில் மக்களுக்கு சேவை செய்ததற்காக நடிகர் விஜய் விஸ்வாவுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இந்த விழாவில் கமலம் குழுமம் சேர்மன் ஜே.கே. முத்து, மங்கையர்கரசி பொறியியல் கல்லூரி முதல்வர் டாக்டர்.கார்த்திகேயன், ஏ.கே.ரெட்டி ஆகியோர் கலந்துகொண்டனர்.

நடிகர் விஜய் விஸ்வா

சமீபத்தில் நடைபெற்ற ரோட்டரி சங்க மாநில அளவிலான பொதுக்குழுவில் ஆளுநர் ஜெய்கன், பாலகுரு முன்னிலையில் மாநில அளவிலான கௌரவ உறுப்பினர் பதவி நடிகர் விஜய் விஸ்வாவுக்கு வழங்கப்பட்டது. டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர், ரோட்டரி சங்க நிர்வாகிகள் முன்னிலையில் கௌரவ உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது.

இதையும் படிங்க: ஷெரின் நடித்த 'ரஜினி' படம் நிறைவு!

ABOUT THE AUTHOR

...view details