தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெட்ரோல் டீசல் விலைவாசியைக் கண்டித்தாரா? - ட்விட்டர் ட்ரெண்டிங்கில் மாஸ் காட்டும் விஜய் - சைக்கிள் விஜய்

ட்விட்டரில் PetrolDieselPriceHike, தளபதி விஜய் ஆகிய ஹேஷ்டேகுகளில் தொடர்ந்து விஜய் வாக்கு செலுத்திய புகைப்படங்கள், வீடியோ பகிரப்பட்டு ட்ரெண்டாகி வருகின்றன.

விஜய்
விஜய்

By

Published : Apr 6, 2021, 3:05 PM IST

தமிழ்நாட்டில் இன்று (ஏப்ரல்.06) காலை 7 மணி முதல் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், நீலாங்கரையில் உள்ள வாக்குப்பதிவு மையத்திற்கு நடிகர் விஜய், சைக்கிளில் வந்து வாக்குச் செலுத்தினார். இது பெருவாரியான மக்களின் கவனத்தை ஈர்த்தது.

மேலும், வீட்டிலிருந்து அவர் வந்த வழி நெடுகிலும் ஏராளமான ரசிகர்கள் வாகனங்களில் அவரைப் பின் தொடர்ந்து வந்து, தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஒருபுறம் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் அதே வேளையில், விஜய் வாக்கு செலுத்திய புகைப்படமும் வீடியோவும் இன்று காலை முதலே சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு ட்ரெண்டிங்கில் உள்ளன.

இந்நிலையில், நடிகர் விஜய் பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டிக்கும் வகையில் தான் சைக்கிளில் வந்து வாக்கு செலுத்தினார் என சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. ”வீட்டின் அருகிலேயே வாக்குச்சாவடி மையம் அமைந்துள்ளதால் விஜய் சைக்கிளில் வந்து வாக்களித்தார்” என இது குறித்து முன்னதாக அவரது பிஆர்ஓ தரப்பில் விளக்கமளிக்கப்பட்டபோதும், ட்விட்டரில் PetrolDieselPriceHike, தளபதி விஜய் ஆகிய ஹேஷ்டேகுகளில் தொடர்ந்து அவர் வாக்கு செலுத்திய புகைப்படங்கள், வீடியோ பகிரப்பட்டு ட்ரெண்டாகி வருகின்றன.

இதையும் படிங்க:சைக்கிளில் வந்து வாக்களித்த நடிகர் விஜய்!

ABOUT THE AUTHOR

...view details