சென்னை:சென்னையில் உள்ள அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், கடந்த நவம்பர் மாதம் அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில், தனியார் அலுவலகத்தில் வேலை செய்து வரும் அப்பெண்ணிற்கு தோழி மூலம் கிண்டி பகுதியை சேர்ந்த ராஜேஷ் (வயது 32) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
இந்த நிலையில் ராஜேஷ், தனக்கு திருமணம் ஆகவில்லை. அப்பெண்ணை தீவிரமாக காதலிக்கிறேன் என்றும், திருமணம் செய்து கொள்கிறேன் என்றும் கூறியுள்ளார். கடந்த ஒரு வருடமாக இருவரும் பழகி வந்த நிலையில் அப்பெண்ணிடம், ராஜேஷ் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். அதன் பிறகு அவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பது தெரியவந்த நிலையில், தன்னை ஏமாற்றிய ராஜேஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகாரில் அப்பெண் குறிப்பிட்டு உள்ளார்.