தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தளபதி 66: வைரலாகும் விஜய்யின் புதிய லுக்! - விஜய் 66 படம்

வம்சி இயக்கத்தில் நடித்துவரும் நடிகர் விஜய்யின் புதிய தோற்றம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தளபதி 66
தளபதி 66

By

Published : May 10, 2022, 2:12 PM IST

நடிகர் விஜய் தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக தளபதி 66 என பெயரிடப்பட்டுள்ளது.

இப்படத்தில் விஜய் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மேலும் சரத்குமார், யோகிபாபு, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு தமன் இசை அமைக்கிறார். இதன்படப்படிப்பு தற்போது ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குடும்பக்கதையாக இப்படம் உருவாகி வருகிறது.

தளபதி 66
தளபதி 66

இப்படத்தில் விஜய்யின் தோற்றம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. விஜய் இளமையாக இருக்கும் அந்த போட்டோவை, ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து, கொண்டாடி வருகின்றனர். அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு இப்படம் வெளியாக உள்ளது.

விஜய்யின் புதிய லுக்

இதையும் படிங்க: சாய் பல்லவிக்கு பிறந்தநாள் பரிசளித்த கமல்..!

ABOUT THE AUTHOR

...view details