தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தன்னுடைய பாணியில் ரசிகர்களை மீண்டும் சந்தித்த நடிகர் விஜய்.. வைரலாகும் வீடியோ..! - விஜய் செல்ஃபி

Actor Vijay:சென்னையில் நடைபெற்று வரும் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஜய் மீண்டும் ரசிகர்களை சந்தித்துள்ளார். இது தொடர்பான வீடியோ வெளியாகி தற்போது சமூக வளைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

actor-vijay-meet-with-fans-on-the-set
ரசிகர்களை சந்தித்த நடிகர் விஜய்.

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 11, 2024, 8:23 PM IST

சென்னை:நடிகர் விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘GOAT’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, மைக் மோகன், பிரசாந்த், பிரபுதேவா, பிரேம்ஜி என பல்வேறு நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

இதன் படப்பிடிப்பு வெளிநாட்டில் நடத்தப்பட்ட பிறகு தற்போது தமிழகத்தில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. டைம் டிராவலை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்தில், நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்பது சமீபத்தில் வெளியான GOAT போஸ்டர்கள் மூலம் உறுதியானது.

இந்த நிலையில் , நேற்று நடிகர் விஜய் GOAT படப்பிடிப்பு தலத்தில் தனது ரசிகர்களுடன் செலஃபி எடுத்துக்கொண்ட புகைப்படம் மற்றும் வீடியோ இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னையில் நடைபெற்று வரும் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஜய் மீண்டும் ரசிகர்களைச் சந்தித்துள்ளார்.

இது தொடர்பான வீடியோ வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. மிகவும் கேசுவலான லுக்கில் இருந்த விஜய்யைப் பார்க்க ரொம்ப கியூட்டாகவும், கொஞ்சம் காமெடியாவும் இருக்கிறது என அவரது ரசிகர்கள் சோஷியல் மீடியாக்களில் கமெண்ட் கொடுத்து வருகிறார்கள்.

இதையும் படிங்க:நாளை திரையரங்குகளுக்கு வரும் விஜய் சேதுபதியின் மெரி கிறிஸ்துமஸ்!

ABOUT THE AUTHOR

...view details