சென்னை விமான நிலையத்தில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவரிடம் நடிகர் விஜய் வீட்டில் நடந்த வருமான வரித்துறை சோதனை குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, ஒன்றும் இல்லை என்றால் விஜய் கவலைப்பட தேவையில்லை என தெரிவித்தார்.
வேண்டுமானால் விஜய் வழக்குத் தொடுக்கலாம் - சு. சாமி - நடிகர் விஜய் குறித்து சுப்பிரமணியன் சுவாமி
சென்னை: நடிகர் விஜய்யை படப்பிடிப்புத் தளத்திலிருந்து அழைத்து வந்து சோதனை செய்தது சரியில்லை என்றால் விஜய் வழக்கு தொடுக்கலாம் என்று சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
subramanian swamy latest
தொடர்ந்து பேசிய அவர், "விஜய்யை படப்பிடிப்பு தளத்திலிருந்து அழைத்து வந்து வருமான வரித்துறை சோதனை செய்தது சரியில்லை என்றால் விஜய் வழக்கறிஞர்களை வைத்து வழக்கு தொடுக்கலாம்" என்றார்.
இதையும் படிங்க: விஜய் மீதான வருமான வரி சோதனையில் அரசியல் உள்நோக்கம் உள்ளது - கே.எஸ். அழகிரி