நடிகர் விஜய் தனது ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரியிலிருந்து விலக்களிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுப்பிரமணியம் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
மேலும், வரி என்பது நன்கொடை அல்ல பங்களிப்பு என்றும், நீங்கள் நிஜ ஹீரோவாக இருங்கள் என்றும் கூறி ஒரு லட்சரூபாய் அபராதம் விதித்தும் நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில், இவ்வழக்கின் தீர்ப்பை எதிர்த்து நடிகர் விஜய் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் தன்னை பற்றி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள விமர்சனங்களை நீக்க வேண்டுமெனவும் கோரிக்கை வைத்திருப்பதாக கூறப்படுகிறது. தனி நீதிபதியின் தீர்ப்பு நகல் இல்லாமல், இந்த மேல்முறையீட்டு மனுவை எண்ணிட்டு விசாரணைக்கு செய்ய வேண்டும் என விஜய் தரப்பில் கூடுதல் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு வரும் திங்கட்கிழமை (ஜூலை 19) நீதிபதிகள் சுந்தரேஷ், மஞ்சுளா ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வருகிறது.
இதையும் படிங்க:விஜய் கார் சர்ச்சை: ஆதரவுக்கரம் நீட்டிய ஓபிஎஸ் இளைய மகன்