தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘சூரரைப் போற்று' - நடிகர் சூர்யாவுக்கு விருது - etv bharat

நடிகர் சூர்யா
நடிகர் சூர்யா

By

Published : Aug 20, 2021, 5:24 PM IST

Updated : Aug 20, 2021, 6:35 PM IST

17:16 August 20

மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் நடிகர் சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ திரைப்படம் இரண்டு விருதுகளைக் வென்றுள்ளது. சிறந்த படத்திற்கான விருது சூரரைப் போற்று திரைப்படத்திற்கும், சிறந்த நடிகருக்கான விருது நடிகர் சூர்யாவுக்கும் கிடைத்துள்ளது.

இரண்டு விருது

சென்னை: 2020 ஆம் ஆண்டு தீபாவளியையொட்டி சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் 'சூரரைப் போற்று'  திரைப்படம் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. கேப்டன் ஜி.ஆர் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றில் சில பகுதிகளை வைத்து சூரரைப் போற்று படமாக சுதா கொங்கரா இயக்கினார். 

இந்தியா முழுவதும்  'சூரரைப் போற்று' படத்தை ரசிகர்கள் கொண்டாடினர். மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் 'சூரரைப் போற்று' திரைப்படம் சமீபத்தில் போட்டியிட்டது. தற்போது, கரோனா ஊரடங்கால் ஆஸ்திரேலியாவில் இருந்து ஆன்லைன் மூலம் இந்த  விழா நடைபெற்றது. 

மெல்போர்ன் இந்திய திரைப்பட விழா

இதில், 'சூரரைப் போற்று' படம் மட்டுமல்லாமல், 'தி கிரேட் இந்தியன் கிச்சன்', 'ஷெர்னி' உள்ளிட்ட படங்களும் போட்டியிட்டன. சிறந்த படத்திற்கான விருது சூரரைப் போற்று திரைப்படத்திற்கும், சிறந்த நடிகருக்கான விருது நடிகர் சூர்யாவுக்கும் கிடைத்துள்ளது. 

‘சூரரைப் போற்று’ படத்திற்கு 2 விருதுகள்

இந்த விழாவில், ஆன்லைன் மூலம்  கலந்துகொண்ட சூர்யா 'சூரரைப் போற்று' படத்திற்காக எனக்கு கிடைத்த முதல் விருது என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். 

இதையும் படிங்க:வந்துட்டான், வந்துட்டான், வந்துட்டான்...’ - 'கேஜிஎஃப் 2' அப்டேட் வெளியிட்ட இயக்குநர்!

Last Updated : Aug 20, 2021, 6:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details