சூர்யா (suriya) நடிப்பில் நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படம் ஜெய் பீம் (jai bhim). இப்படத்தை முதலமைச்சர் ஸ்டாலின், நடிகர் கமல் ஹாசன் உள்ளிட்ட பலர் வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.
அதுமட்டுமல்லாது, ஆட்சியர், காவல் துறை உயர் அலுவலர்கள் உள்ளிட்ட அரசின் முக்கியப் பணியாற்றிவருபவர்களும் ஜெய் பீம் படத்தை வெகுவாகப் பாராட்டிவருகின்றனர். மேலும் விமர்சகர்கள், ரசிகர்கள் எனப் பலதரப்பட்டோர் 'ஜெய் பீம்' (jai bhim) படத்தைப் பாராட்டி சமூக வலைதளத்தில் கருத்துகளைப் பதிவிட்டுவருகின்றனர்.
இந்நிலையில், மக்களவை உறுப்பினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவருமான தொல். திருமாவளவன் (Thol. Thirumavalavan) அவரது ட்விட்டரில், "ஜெய் பீம் திரைப்படம் வழியாக காலம் காலமாய் எவராலும் கவனிக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டோர் கதறியழும் அவலக்குரலை அழுத கண்களுடன் அகிலத்தையே கேட்கவைத்த பாதிக்கப் பட்டோருக்காகச் சட்டத்தின் வழி போராடி வென்ற சமூகநீதிப் போராளியைப் போற்றி பெருமைப்படுத்திய சூர்யாவின் சமூகப் பொறுப்புணர்வுடன்கூடிய தொண்டுள்ளத்தை தொழிலறத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் உளமாரப் பாராட்டுகிறோம்" எனப் பதிவிட்டிருந்தார். இதற்கு சூர்யா இன்று (நவம்பர் 15) நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில்,"மதிப்புக்குரிய திரு. தொல்.திருமாவளவன் அவர்களுக்கு வணக்கம். தங்கள் வாழ்த்தும் பாராட்டும் மன நிறைவை அளித்தன.