சென்னை:1 முதல் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் அரசு பள்ளி மாணவர்களின் கற்றல் இடைவெளியைக் குறைக்க, 'இல்லம் தேடி கல்வி' என்ற திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று (அக்.27) தொடங்கிவைத்தார்.
இந்தத் திட்டம் மூலம் தன்னார்வலர்கள் மாணவர்களின் வீட்டின் அருகே சென்று மாலை நேரத்தில் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் பாடம் நடத்துவார்கள். இந்தநிலையில் இந்தத் திட்டத்திற்கான விழிப்புணர்வு வீடியோ ஒன்றை தமிழ்நாடு அரசு இன்று (அக்.28) வெளியிட்டுள்ளது.
இல்லம் தேடி கல்வி விழிப்புணர்வு வீடியோ நடிகர் சூர்யா இடம்பெற்றுள்ள அந்த வீடியோவில், "மாணவர்களின் கற்றல் ஆர்வத்தை தூண்டும் வகையில் விளையாட்டு முறையில் கல்வி ஆர்வலர்கள் கல்வி கற்பிக்க உள்ளனர்.
உரிய பாதுகாப்புடன் இந்த திட்டத்தின் மூலம் மாணவர்கள் பயன்பெற பெற்றோர்கள், ஊர்மக்கள் ஊக்குவிப்போம். மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க விருப்பமுள்ள தன்னார்வலர்கள் பதிவு செய்யுங்கள். கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்று பாரதியார் கூறியதை மீண்டும் உறுதிசெய்வோம்" என்று பேசியுள்ளார்.
இதையும் படிங்க: IIT நுழைவுத் தேர்வில் வென்ற ஏழை மாணவனின் கல்விச் செலவை அரசு ஏற்கும் - முதலமைச்சர்