தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விஷ்ணு விஷாலின் தந்தைக்கு முன்பிணை வழங்கக் கூடாது - சூரி தரப்பில் எதிர்ப்பு - சூரியின் வழக்கு அப்டேட்

சென்னை: பண மோசடி புகாரில் நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தைக்கு முன்பிணை வழங்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் சூரி தரப்பில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.

உயர் நீதிமன்றம்
உயர் நீதிமன்றம்

By

Published : Oct 28, 2020, 6:12 PM IST

நடிகர் விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடித்த 'வீரதீர சூரன்' என்ற திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் சூரி நடித்துள்ளார். இதற்காக வழங்க வேண்டிய 40 லட்சம் ரூபாய் ஊதியத்துக்குப் பதில் சிறுசேரியில் ஒரு நிலத்தை தருவதாக அப்படத்தின் தயாரிப்பாளர் அன்புவேல்ராஜன், விஷ்ணு விஷால் தந்தையும், ஓய்வுபெற்ற டிஜிபியுமான ரமேஷ் குடவாலா கூறியுள்ளனர்.

அந்த நிலத்துக்காக இவர்கள் இருவரும் தன்னிடமிருந்து 2.70 கோடி ரூபாய் கூடுதலாகப் பெற்று மோசடி செய்துவிட்டதாக காவல் துறையில் சூரி புகார் அளித்திருந்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் பதிவான வழக்கை தற்போது மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் விசாரித்துவருகின்றனர்.

இந்த நிலையில், காவல் துறையினர் தங்களை கைதுசெய்யக்கூடும் என்ற அச்சத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னாள் டிஜிபியும் விஷ்ணு விஷாலின் தந்தையுமான ரமேஷ் குடவாலா முன்பிணை கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு இன்று (அக்டோபர் 28) நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தபோது, ரமேஷ் குடவாலாவுக்கு முன்பிணை வழங்கக் கூடாது என சூரி தரப்பில் வாதிடப்பட்டது.

மேலும், இந்த வழக்கில் தங்கள் தரப்பில் இடையீட்டு மனு தாக்கல்செய்ய உள்ளதாகவும் சூரி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சூரி தரப்பில் இடையீட்டு மனு தாக்கல்செய்ய அனுமதித்த நீதிபதி, வழக்கின் விசாரணையை நவம்பர் 5ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

ABOUT THE AUTHOR

...view details