சென்னை:தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் சிவகார்த்திகேயன், உக்ரைன் நாயகி மரியா ரியாபோஷப்கா மற்றும் சத்யராஜ் நடிப்பில், தெலுங்கு திரையுலகின் இளம் இயக்குனர் அனுதீப் இயக்கத்தில், தீபாவளிக்கு வெளியான திரைப்படம் 'பிரின்ஸ்'.
இந்த படம் வெற்றி பெறவில்லை. படத்தில் இருந்த காமெடி காட்சிகளும் ரசிகர்களை சோதித்தது. இதனால் பாக்ஸ் ஆபிஸில் மோசமான தோல்வியை சந்தித்தது. இதற்கு சிவகார்த்திகேயன் மனதளவில் மிகவும் வேதனை அடைந்தார். இதுமட்டுமின்றி படத்தை விநியோகம் செய்த விநியோகஸ்தர்கள் பலருக்கும் மிகப் பெரிய பண இழப்பு ஏற்பட்டது.