சின்னத்திரை மூலம் தன் கனவை ஆரம்பித்து படிப்படியாக காமெடியன், கதாயநாயகன், ஆக்ஷன் ஹீரோ என வளர்ந்திருப்பவர், நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடித்த டாக்டர், டான் திரைப்படங்கள் ரிலீஸ் ஆன குறைந்த நாட்களில் 100 கோடி ரூபாய் வசூலித்து பிரமிக்க வைத்தன.
சக நடிகர், நடிகைகள், ரசிகர்களால் எஸ்.கே. என செல்லமாக அழைக்கப்பட்டு வருகிறார். சமூக வலைதளங்களில் அவ்வப்போது ஆக்டிவாக இருக்கும் எஸ்.கே., நடிகர் அஜித்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
மேலும், 'நீண்ட நாட்களுக்குப் பிறகு அஜித் சாரை சந்தித்தேன். மீண்டும் ஒரு சந்திப்பு. வாழ்நாள் முழுவதும் போற்றப்படும். நேர்மறையான வார்த்தைகளுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி' என்று பதிவிட்டுள்ளார்.
தற்போது இந்த போஸ்ட், ரசிகர்களிடம் இருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இந்த புகைப்படம் எப்போதோ எடுக்கப்பட்டது என்றும்; இதனை இப்போது பதிவிட என்ன காரணம் என்றும் சிலர் பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் சிலர், 'அப்போ விஜய், இப்போ அஜித்தா, புரிந்துவிட்டது...!' எனப் பதிவிட்டுள்ளனர். பீஸ்ட் படப்பிடிப்பு சமயத்தில் நடிகர் விஜயுடன் எடுத்த படத்தை எஸ்.கே. பகிர்ந்தார். பீஸ்ட் ரிசல்ட் என்ன ஆனது என ஊருக்கே தெரியும்...
பீஸ்ட் படபிடிப்பு தளத்தில் நடிகர் விஜயுடன், எஸ்.கே. எடுத்துக் கொண்ட படம்
தற்போது துணிவு பட ரிலீஸுக்கு முன் நடிகர் அஜித்துடன் எடுத்த புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார். துணிவு நிலை என்ன ஆகுமோ என ரசிகர்கள் நடிகர் எஸ்.கே. குறித்து கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:வாரிசு படத்தை மறைமுகமாக வெளியிடும் ரெட் ஜெயன்ட்?