தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'அயலான்' படத்தில் உள்ள ஏலியனுக்கு குரல் கொடுத்த நடிகர் இவரா? - Ayalaan movie release date

Ayalaan Movie Update: ‘லயன் கிங்’ என்ற ஆங்கில படத்தின் தமிழ் டப்பிங்கில் சிம்பா என்ற சிங்கத்திற்கு குரல் கொடுத்திருந்தது நடிகர் தான் ‘அயலான்’ படத்தில் வரும் ஏலியனுக்கும் குரல் கொடுத்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

அயலான் படத்தில் உள்ள ஏலியனுக்கு குரல் கொடுத்துள்ள நடிகர் இவரா
அயலான் படத்தில் உள்ள ஏலியனுக்கு குரல் கொடுத்துள்ள நடிகர் இவரா

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 13, 2023, 8:17 PM IST

சென்னை:குழந்தைகளுக்கு பிடித்த ஹீரோவாக திரையுலகில் வலம் வருபவர், நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் தயாராகி வரும் படம் 'அயலான்' (Ayalaan). ஏலியனை மையமாக கொண்டு சயின்ஸ் ஃபிக்சனாக உருவாகி வரும் அயலான் படம் அனைவரது எதிர்பார்ப்பையும் பெற்றுள்ளது.

டைம் டிராவலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட 'இன்று நேற்று நாளை' என்ற படத்தின் இயக்குநர் ரவிக்குமார் அயலான் படத்தையும் இயக்குகிறார் என்ற செய்தி ரசிகர்களது கவனத்தை பெற்றது. பிரபல தொலைக்காட்சியில் நடைபெற்ற 'நாளைய இயக்குநர்' என்கிற நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமான இயக்குநர் ரவிக்குமார் "இன்று நேற்று நாளை" படத்தின் வித்தியாசமான கதைக்களத்தின் மூலம் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிக் கொண்டார்.

சயின்ஸ் ஃபிக்சன் படங்களை எடுப்பதில் ஆர்வம் மிகுந்த இயக்குநர் ரவிக்குமார், நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்கப்போவதாக வெளியான அறிவிப்பு ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங், யோகிபாபு, கருணாகரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்துக்கு, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இதையும் படிங்க: வேட்டையாட வரும் 'வேட்டையன்' - ரஜினிகாந்த் 170வது பட தலைப்பு வெளியீடு!

"அயலான்" படத்தின் பணிகள் தொடங்கி பல வருடங்கள் கடந்தும், பல்வேறு தடைகள் ஏற்பட்டு படத்தின் வெளியீடு தாமதமானது. இந்த நிலையில் ஒருவழியாக 2024 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு படம் வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில் இப்படத்தில் வரும் ஏலியனுக்கு பிரபல நடிகர் சித்தார்த் குரல் கொடுத்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. சித்தார்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான சித்தா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அவர் அயலான் படத்தில் ஏலியனுக்கு குரல் கொடுத்துள்ளது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு முன் ‘லயன் கிங்’ என்ற ஆங்கில படத்தின் தமிழ் டப்பிங்கில் சிம்பா என்ற சிங்கத்திற்கு சித்தார்த் குரல் கொடுத்திருந்தது வரவேற்பை பெற்றிருந்தது. மேலும் சித்தார்த் நடித்து தமிழில் டப் செய்யப்பட்டு வெளியான ‘ஓ மை பிரண்ட்’ என்ற படத்தில் சித்தார்த்துக்கு சிவகார்த்திகேயன் டப்பிங் குரல் கொடுத்திருந்தார். தற்போது சிவகார்த்திகேயன் படத்திற்கு சித்தார்த் குரல் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து இப்படத்தின் இசை வெளியீட்டு விழா அடுத்த வாரம் நடைபெற உள்ளது அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: ஆர்ஜே விஜய் நாயகனாக அறிமுகமாகும் புதிய படம் தொடக்கம்!

ABOUT THE AUTHOR

...view details