ஹைதராபாத்: அட்லீ இயக்கத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ஜவான். இப்படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகி பாபு, பிரியாமணி, ஹிந்தி நடிகை சன்யா மல்ஹோத்ரா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிரூத் இசை அமைத்து உள்ளார்.
நடிகர் ஷாருக்கானின் ஜவான் திரைப்படத்தை தமிழக இயக்குனர் அட்லி இயக்கி இருப்பதும், தமிழகத்தை சேர்ந்த நயன்தாரா, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்து உள்ளதாலும் இப்படத்திற்கு தமிழ்நாட்டில் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. மேலும், இப்படத்தின் விநியோக உரிமை 16 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
இப்படத்தின் டீசர்கள் மற்றும் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இப்படத்தின் டிரெய்லர் நாளை (ஆகஸ்ட். 31) வெளியாகும் என படக் குழு தரப்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க:நடிகர் விஷாலுக்கு "மார்க் ஆண்டனி" படக்குழு கொடுத்த இன்ப அதிர்ச்சி - என்ன தெரியுமா?
செப்டம்பர் 7ஆம் தேதி ஜவான் திரைப்படத்தை வெளியிட திட்டமிடப்பட்டு உள்ள நிலையில், இப்படத்தின் பிரீ ரிலீஸ் விழா பிரம்மாண்டமாக சென்னையில் உள்ள சாய் ராம் பெறியியல் கல்லூரில் இன்று (ஆகஸ்ட் 30) நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் படத்தின் கதாநாயகன் ஷாருக்கான் கலந்து கொள்கிறார்.
இந்நிலையில், பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தனது X (ட்விட்டர்) பக்கத்தில்; "வணக்கம் சென்னை. நான் வருகிறேன்!!! சாய் ராம் பெறியியல் கல்லூரியில் உள்ள அனைத்து ஜவான்கள்... இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களே தயாராக இருங்கள். நான் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் கேட்டால் த த தயா கூட செய்யலாம். நாளை மாலை 3 மணிக்கு சந்திப்போம்" இவ்வாறு அவர் பதிவிட்டு உள்ளார்.
மேலும், இந்நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி, மற்ற ஜவான் பட நடிகர் நடிகைகள் மற்றும் விழாவின் நாயகனான அனிருத் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். அதுமட்டுமல்லாமல், பொதுவாக இது போன்ற நிகழ்வுகளில் கலந்து கொள்வதை தவிர்க்கும் நடிகை நயன்தாரா இந்த பிரீ ரிலீஸ் விழாவில் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க:"மனிதாபிமானத்தை மையமாக கொண்டுதான் அடுத்த படமும் இருக்கும்" - அயோத்தி பட இயக்குநர்