நடிகர் ரஜினிகாந்த் தீவிர அரசியலுக்கு கால் பதிப்பார் என அவரது ரசிகர்கள் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக எதிர்பார்ப்பில் உள்ளனர். அதிலும் கடந்த சில ஆண்டுகளாக நடிகர் ரஜினிகாந்தின் அறிக்கைகள், செயல்பாடுகள் வருகின்ற சட்டப்பேரவை தேர்தலில் நிச்சயம் அவர் தீவிர அரசியலில் ஈடுபடுவார் என்ற எண்ணத்தை ரஜினி ரசிகர்களிடையே ஏற்படுத்தியது.
இதனையடுத்து, கடந்த சில நாட்களாக ரஜினியின் உடல்நிலை குறித்தும், அவரது அரசியல் வருகை குறித்தும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவியது. அதற்கு நேற்று (அக். 29) தனது அறிக்கையின் மூலம் முற்றுப்புள்ளி வைத்தார் ரஜினிகாந்த்.