மும்பை தனியார் மருத்துவமனையில் கடந்த சில நாள்களாக முரளி என்கின்ற ரஜினி ரசிகர் ஒருவர் கரோனா தொற்றுக்கு உள்ளாகியும் சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டும் சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்நிலையில் டிவிட்டரில் சக ரஜினி ரசிகர்கள் பலரும் 'முரளி விரைவில் குணமடைய வேண்டும்' என்று பிரார்த்தனை செய்து வந்தனர்.
ரசிகருக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆறுதல்! - twitter post
சென்னை : கரோனா தொற்று பாதிப்புக்குக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வரும் தனது ரசிகருக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆடியோ மூலம் ஆறுதல் தெரிவித்தார்.
மேலும் முரளி நேற்றைய தினம் ரஜினிகாந்தை டிவிட்டரில் டேக் செய்து, ”தலைவா, என் இறுதி ஆசை. 2021 தேர்தலில் நீ வெற்றிப்பெற்று தமிழ்நாடு மக்களுக்கு மிகச்சிறந்த தலைவனாகவும் தந்தையாகவும் ஆன்மீக குருவாகவும் வீரநடைபோட்டு, அடித்தட்டு கிராம மக்களின் தனிநபர் வருமானம் 25,000 என்ற நிலையை உருவாக்கிக் கொடு. உன்னை அரியணையில் ஏற்ற பாடுபடாமல் போகிறேனே என்ற ஒரே வருத்தம் தான் எனக்கு” என்று பதிவு செய்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் இன்று (செப்.17) அவருக்கு ஆறுதல் தெரிவித்து ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”முரளி நீ விரைவில் குணமடைவாய், தைரியமாக இரு. நீ மீண்டு வந்து நிச்சயமாக என் வீட்டிற்கு குடும்பத்தோடு வர வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.